டி டி எஃப் வாசன குறித்து இயக்குனர் செல்அம் அளித்திருக்கும் பேட்டி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே மஞ்சள் வீரன் படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளத்தின் மூலம் வைரலாக்கப்பட்டு தற்போது பிரபலமான நபராக திகழ் பவர் டிடிஎஃப் வாசன். இவர் தன்னுடைய உயரக பைக்கில் வேகமாக செல்வது, அப்படி செல்லும்போது ஏழைகளுக்கு பணம் மற்றும் சாப்பாடு உதவிகள் செய்வது என்று வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.
இதனால் இவர் சீக்கிரமாகவே 2K கிட்ஸ் களின் மத்தியில் பிரபலமான நபராக இருக்கிறார். இருந்தாலும், இவர் வண்டியில் அதிவேகமாகச் சென்று பிறரை பயமுறுத்துவதும், சாலை விதிகளை மீறுவது என்று பல வேலைகளை செய்து சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இதனால் இவரிடமிருந்து லைசன்ஸ் பறிக்கப்பட்டது. சமீபத்தில் டிடிஎஃப் வாசல் ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார். இந்த படத்தை இயக்குனர் செல்அம் இயக்குவதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.
டிடிஎஃப் வாசன் நீக்கம்:
அதற்குப் பிறகு இந்த படத்தை குறித்து என்று தகவலுமே வெளியாகவில்லை. ஆனால், சமீபத்தில் மஞ்சள் வீரன் படத்தின் இயக்குனர், இந்தப் படத்தில் கதாநாயகனாக டிடிஎஃப் வாசன் நடித்தார். தற்போது அவரை இந்த படத்தில் இருந்து நீக்கி விட்டோம். வேறு ஒரு நடிகர் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அது தொடர்பான தகவலையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வருகின்ற அக்டோப 15ஆம் தேதி வெளியிட இருக்கிறோம். அவரை நீக்குவதற்கு காரணம், சூழ்நிலை ஒத்துவரவில்லை. அவருக்கு இதைவிட நிறைய வேலை இருக்கிறது என்றெல்லாம் டிடிஎஃப் வாசன் மீது குற்றச்சாட்டு வைத்திருந்தார்.
டிடிஎஃப் வாசன் வீடியோ:
இப்படி இயக்குனர் செல்அம் சொன்னது இணையத்தில் சர்ச்சைகளை எழுப்பியது. ஆனால், இது தொடர்பாக மனவேதனையில் டிடிஎஃப் வாசல் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், என்னிடம் சொல்லாமலே என்னை மஞ்சள் வீரன் படத்திலிருந்து நீக்கிவிட்டார்கள். என்னிடம் சொல்லியிருந்தால் நானே விலகி இருப்பேன். இதுவரை இந்த படத்திற்காக ஒரு பூஜை, ஒரு போட்டோ சூட் மட்டும் தான் எடுத்திருக்கிறார்கள். பூஜைக்கு கூட பணம் இல்லை என்று நான் தான் கொடுத்தேன். எனக்கு துரோகம் செய்பவர்கள் முன்பு நான் வாழ்ந்து வெற்றி அடைவதுதான் அவர்களுக்கு நான் கொடுக்கும் பதிலடி. நான் மனமுடைய மாட்டேன், தளர மாட்டேன் என்று இயக்குனர் செல்அம் அவர்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார்.
இயக்குனர் செல்அம் பேட்டி:
இந்நிலையில் இயக்குனர் செல்அம் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், படத்திலிருந்து சொல்லிட்டு நீக்கிற அளவுக்கு டிடிஎஃப் வாசன் செயலில் ஒண்ணும் பெருசா பண்ண வில்லை. முதலில் அந்த தம்பி எனக்கு தங்கமா தெரிஞ்சாரு. இப்ப சொல்லாமல் நீக்கிற அளவுக்கு ஒரு குப்பை மாதிரி ஆயிட்டாரு. நான் எவ்வளவு பெருந்தன்மையாக தம்பியை ஒரு சில சூழ்நிலை காரணமாக நீக்குகிறேன் என்று சொல்லிட்டு விட்டுவிட்டேன். என்னால் அப்பாவே எல்லாத்தையும் சொல்லி இருக்க முடியும். ஆனால், நான் சொல்லவில்லை. ஆனால், அந்த தம்பி என்னை வைத்து வீடியோ ஒன்று போட்டு மூன்று லட்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான். இன்னைக்கும் அவன் என் உழைப்பை சாப்பிட்டு கொண்டு தான் இருக்கிறான்.
மக்கள் இப்போ யோசிப்பார்கள்:
படத்துக்கு பூஜை போட்டு ஒரு வருஷம் பக்கத்துல தான் ஆகுது. ஆனால் மூணு வருஷமா படம் எடுக்கல என்று பொய் சொல்றாரு. மக்களை நல்லா அழுது சென்டிமென்டா பேசி ஏமாற்றுகிறான். தம்பி இளைஞர்களை கெடுப்பதை நிறுத்திவிட்டு, பொய் சொல்லாமல் திருந்தினால் அவர் சூப்பர் ஸ்டார் ஆவதற்கான வாய்ப்பு கூட இருக்கிறது. இப்ப கூட நான் இதையெல்லாம் சொல்லவில்லை என்றால் மக்கள் என்னை தான் தப்பாக நினைப்பார்கள். இதுக்கு அப்புறம் மக்கள் யார் சரி யார் தவறு என்று யோசிப்பார்கள். டிடிஎஃப் வாசனுக்கு சரியான திராணி இருந்தால் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடு பண்ணி என் பக்கத்தில் உட்கார்ந்து என்னை கேள்வி கேட்க முடியுமா? என்று ஆதங்கத்தோடு பேசி உள்ளார்.