உருவ கேலி குறித்து கேட்ட ரசிகைக்கு சாய் பல்லவியை உதாரணம் சொல்லியுள்ளார் நடிகை மஞ்சிமா மோகன். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் மஞ்சிமா மோகன். இவர் கேரளத்தின் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் 90 காலகட்டத்தில் இறுதியில் 2000 தொடக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கதாநாயகியாக வலம் வருகிறார். 1998 ஆம் ஆண்டு தான் இவர் சினிமா உலகிற்குள் நுழைந்தார். அதுவும் இவர் முதன் முதலாக மலையாள மொழி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
அதற்கு பின் சிறிய இடைவேளை எடுத்து கொண்டு 2016ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்து இருந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தேவராட்டம், முடிசூடா மன்னன் என சில படங்களில் நடித்தார்.
சமீபத்தில் நேர்ந்த விபத்து :
மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். பிறகு சிறிது காலம் மஞ்சுமா மோகன் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதற்கு காரணம் இவருக்கு ஏற்பட்ட விபத்து தான். இவருக்கு ஏற்பட்ட விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டது. இதற்காக இவர் தீவிர சிகிச்சை பெற்று இருந்தார் .அதற்குப் பிறகு இவருக்கு கடுமையான முதுகுவலி ஏற்பட்டு ட்ரீட்மென்ட் செய்து கொண்டிருந்தார்.
உடல் எடையால் மன அழுத்தம் :
இதனால் இவர் சினிமாவில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து கொண்டார். அதனால் இவருடைய உடல் எடை கொஞ்சம் வெயிட் போட்டு விட்டது என்றே சொல்லலாம். இருந்தாலும் மஞ்சுமா மோகன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால், இவருடைய உடல் எடையை குறித்து பலரும் ட்ரோல் செய்து வந்திருந்தார்கள். இதனால் மஞ்சுமா மோகன் பெரிய மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதில் இருந்து மீண்டு வந்ததாகவும் பேட்டியில் கூறி இருந்தார்.
உடல் எடை கூடியதால் கேலி :
சமீபத்தில் இவர் FIR படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது இவரது உடல் எடையை பார்த்து பலரும் கேலி செய்தனர். விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான FIR திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மனு ஆனந்த் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரேபா மோனிகா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்தப் படத்தில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
சாய் பல்லவியை உதாரணம் சொன்ன மஞ்சிமா :
இப்படி ஒரு நிலையில் FIR படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மஞ்சிமா மோகனிடம் ரசிகை ஒருவர் உடல் கேலிகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்க்கு பதில் அளித்த மஞ்சிமா மோகன் ‘ஒல்லியாக இருக்க வேண்டும் என அவசியம் இல்லை, ஆரோக்கியமாக இருந்தால் போதும். ஒல்லியாக இருந்தால் ஏன் sick ஆக இருக்கீங்க என கேட்பாங்க. நீங்கள் எப்படி இருந்தாலும் body shaming இருக்கத்தான் செய்யும். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் போதும். சாய்பல்லவியை பாருங்க. அவர் எவ்வளவு confident ஆக தன்னை காட்டிக்கொள்கிறார். அவர் மற்றவர்களுக்கு இன்ஸ்பிரேஷன்’ என்று கூறியுள்ளார்.