திருமணத்திற்கு வந்தவர்கள் செய்த செயலால் கடுப்பான மஞ்சிமா – அவர்களுக்கு கொடுத்த தக்க பதிலடி.

0
431
- Advertisement -

தன்னுடைய உடல் எடை குறித்து கேலி செய்தவர்களுக்கு மஞ்சிமா மோகன் கொடுத்திருக்கும் பதிலடி சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் மஞ்சிமா மோகன். இவர் கேரளத்தின் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் 90 காலகட்டத்தில் இறுதியில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது கதாநாயகியாக வலம் வருகிறார்.

-விளம்பரம்-
manjima

மேலும், இவர் முதன் முதலாக மலையாள மொழி படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதற்கு பின் சிறிய இடைவேளை எடுத்து கொண்டு 2016ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்து இருந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் மஞ்சிமா மோகன். இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

- Advertisement -

மஞ்சிமா மோகன் திரைப்பயணம்:

இந்த படத்தை தொடர்ந்து இவர் தேவராட்டம், சத்ரியன் என சில படங்களில் நடித்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இடையில் சிறிது காலம் மஞ்சிமா மோகன் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதற்கு காரணம் இவருக்கு ஏற்பட்ட விபத்து தான். இவருக்கு ஏற்பட்ட விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டது. இதற்காக இவர் தீவிர சிகிச்சை பெற்று இருந்தார் .

மஞ்சிமா மோகன் நடித்த படம்:

அதனால் இவருடைய உடை எடை கொஞ்சம் வெயிட் போட்டு விட்டது என்றே சொல்லலாம். இருந்தாலும், மஞ்சிமா மோகன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த எப்ஐஆர் படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடித்து இருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

-விளம்பரம்-

கௌதம்- மஞ்சிமா காதல்:

இதனிடையே கௌதம்- மஞ்சுமா காதல் இணையத்தில் வைரலாகி இருந்தது. தேவராட்டம் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்து இருந்தார்கள். அப்போது இருந்தே இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்தனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டி விட்டதால் சமீபத்தில் தான் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் திருமணம் உறவினர்களின் முன்னிலையில் எளிமையாக நடந்தது. இவர்களுடைய திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். சோசியல் மீடியாவிலும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

மஞ்சிமா கொடுத்த பதிலடி:

மேலும், மஞ்சிமாவின் உடல் எடை அதிகமாக இருப்பதை குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை கேலி செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து மஞ்சிமா கூறியிருப்பது, என் திருமணத்தின் போது கூட சிலர் என் உடல் எடை குறித்து கருத்து தெரிவித்திருந்தார்கள். நான் உடல் தகுதியுடன் இருக்கிறேன். அதில் எனக்கு மகிழ்ச்சி தான். என் வேலை தொடர்பாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற தேவை ஏற்பட்டால் கண்டிப்பாக அதை செய்வேன். இது பற்றி மற்றவர்களுக்கு என்ன கவலை? என்று கேட்டிருக்கிறார்.

Advertisement