கள்ளத்தனமாக பாக்காதீர்கள் ! மன்னிப்பு கேட்ட நடிகை மஞ்சிமா மோகன் ?

0
976
Manjima Mohan
- Advertisement -

தமிழில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் தனது முதல் படத்தில் நடித்தவர் மஞ்சிமா மோகன். கேரளவைச் சேர்ந்த இவர் தற்போது தமிழ் படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். தனது முதல் படத்திலேயே கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடித்து அசத்தியவர் மஞ்சிமா.
 Manjima Mohanதற்போது உதயநிதி ஸ்டாலினுடன் ‘இப்படை வெல்லும்’ படத்தில் நடித்து வெளியாகியுள்ளது. இப்படத்தில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தினை கௌரவ் இயக்கியுள்ளார். படம் ரசிகர்களைடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், இதில் மஞ்சிமா மோகனின் நடிப்பு முத்திரை பதித்துள்ளதாக ரசிகர்கள் பேசிவருகின்றனர்.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோசன் வேலைகளில் மஞ்சிமா கலந்துகொள்ளவில்லை. அதற்க்காக மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், தற்போது குயின் படத்தின் ரீமேக்கிற்காக பிரான்சில் உள்ளதால், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினார்.

அதே போல் இப்படை வெல்லும் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும், படத்தினை தியேட்டர்களில் சென்று பாருங்கள், சட்டத்திற்கு புறம்பாக வெப்சைட்டில் பார்க்காதீர்கள் எனவும் வேண்டுகோள் வைத்தார் மஞ்சிமா மோகன்.

Advertisement