படப்பிடிப்பு தளத்தில் மஞ்சு வாரியருக்கு ஏற்பட்ட விபத்தால் ரத்தான நிகழ்ச்சி.

0
1295
manju-warrier
- Advertisement -

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அவர்களின் நடிப்பில் வெளிவந்த படம் “அசுரன்”. இந்த படத்தில் பச்சையம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடிகை மஞ்சு வாரியர் வாழ்ந்திருந்தார் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இவருடைய நடிப்பு இருந்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார் மஞ்சு வாரியார். இவர் மலையாள திரைப்பட உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் நடிகை மஞ்சு வாரியார் அவர்களை மலையாள திரை உலகம் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைப்பார்கள். இதனை தொடர்ந்து தமிழில் இவர் அறிமுகமான அசுரன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வருவதால் நடிகை மஞ்சு வாரியருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

-விளம்பரம்-
Image result for Manju Warrier

- Advertisement -

நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் முதலில் விளம்பரப் படங்களில் தான் நடித்து வந்தார். அதற்கு பிறகு மலையாளத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘சாக்ஷியம்’ என்ற படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். அதோடு இவர் ஒரு சில சீரியல்களில் கூட நடித்து உள்ளார். இந்நிலையில் மலையாள படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் விபத்தில் சிக்கி உள்ளார். இதனால் இவரது கால் மட்டும் இடுப்பில் அதிக காயம் ஏற்பட்டு உள்ளது. தற்போது இவர் “சதுர்முகம்” என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ரஞ்சித் கமலா சங்கர் -ஷாலி வி அவர்கள் இயக்குகின்றனர். இந்த படம் முழுக்க முழுக்க ஹாரர், திரில்லர், திகில் படமாக உள்ளது.

இந்த படத்தில் மஞ்சு வாரியர் அவர்கள் தொழிலதிபராக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தப் படத்தினுடைய ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டது. மஞ்சு வாரியர் அவர்கள் வில்லன் கும்பலிடம் சண்டை போடுவது போன்று ஆக்ஷன் காட்சிகளை படமாக்கப்பட்டது. இந்த சண்டைக் காட்சி ஆபத்தான சண்டைக் காட்சி என்றும் படக்குழுவினர் கூறினார்கள். மேலும், நடிகை மஞ்சு வாரியர்க்கு பதிலாக டூப் நடிகையை பயன்படுத்தலாம் என்றும் ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஆலோசனை கூறினார்கள். ஆனால், நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் அது எல்லாம் வேண்டாம் நானே நடிக்கிறேன் என்று கூறினார். இது தான் அவர் முதன் முதலாக ஆக்ஷன் காட்சியில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Image result for Manju Warrier

மேலும், பாதுகாப்பு கயிறு கட்டப்பட்டு அவர் மேலிருந்து கீழே குதிக்கும் காட்சி எடுக்கப்பட்டது. அப்போது மஞ்சு வாரியார் கீழே குதிக்கும் போது எதிர்பாராதவிதமாக அவருடைய காலிலும், இடுப்பிலும் காயம் ஏற்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் நடிகை மஞ்சு வாரியர் துடி துடித்துப் போனார். இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி சொன்னார்கள். அது மட்டுமில்லாமல் காலுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் இவர் 12 ஆம் தேதி கலந்து கொள்வதாக இருந்த நடன நிகழ்ச்சியும் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்பவருக்கு நடிகை மஞ்சு வாரியர் கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில் மருத்துவர்கள் என் காலுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று கூறியதால் என்னால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்று கூறி இருந்தார். இதனால் நடன நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர். 

Advertisement