அந்த படத்தில் நான் நடித்திருக்க வேண்டும் – 22 ஆண்டுக்கு முன் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துள்ளது குறித்து பேசிய மஞ்சு வாரியர்.

0
513
manju
- Advertisement -

கோலிவுட் ஸ்டாரான பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி தளபதி திரைப்படம் நடித்துள்ளார் வாரிசு திரைப்படத்துடன் ஒன்றாக வெளியானது. இப்படத்தை எச் வினோத் இயக்கியிருந்தார். மேலும் ரெட் ஜென்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார். மேலும் முன்னணி கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான துணிவு திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தொடக்கம் முதலே நல்ல விமர்சனங்களை இப்படம் பெற்று வரும் நிலையில் படம் வெளியாகிய முதல் நாள் விஜய்யின் வாரிசு படத்தை விட அதிகமான வசூல் செய்ததாக கூறப்பட்டது. மேலும் துணிவு படத்தின் பஜ்ஜெட் 200 கோடி என்பதினால் இன்னும் சில நாட்களில் அதனை விட அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீட்டிற்கு காரணமானவர்களில் ஒருவர் நடிகை மஞ்சு வாரியர்.

- Advertisement -

மஞ்சு வாரியர்:

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து இருந்த ‘அசுரன் ‘ படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மஞ்சு வாரியார். இந்த படம் அமோக வெற்றி பெற்று இருந்தது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மலையாள நடிகை மஞ்சு வாரியார். இவர் தமிழில் பரிட்சியமான நடிகை இல்லை என்றாலும், மலையாள திரைப்பட உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் :

அதுமட்டும் இல்லாமல் இவரை மலையாள திரை உலகில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று தான் அழைப்பார்கள். இதனை தொடர்ந்து தமிழில் மஞ்சு வாரியருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆரம்பத்தில் நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் விளம்பரப் படங்களில் தான் நடித்து இருந்தார். அதற்கு பிறகு மலையாளத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான ‘சாக்ஷியம்’ என்ற படம் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அஜித்துடன் லடாக் பைக் ரைடு :

இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியர் துணிவு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு அஜித்துடன் இணைந்து லடாக் பகுதிகளில் பைக் ரைடு செய்தார். மேலும் அந்த பைக் பயணம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை கூட வெளியிட்டு சக பயணிகள் அனைவருக்கும் நன்றி. இந்த பயணத்தில் என்னை இணைத்துக்கொண்ட அஜித் அவர்களுக்கும் எனது நன்றி’ என பதிவு செய்து தன்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் 22 ஆண்டுகளுக்கு முன்பே அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும் ஆனால் அந்த வாய்ப்பை மிஸ் செய்து விட்டதாகவும் சமீபத்தில் அளித்த பேட்டியில் மஞ்சுவாரியர் தெரிவித்துள்ளார்.

அஜித் படத்தை மிஸ் செய்த படம் :

கடந்த 2000 ஆண்டு ராஜீவ் மேனன் இயக்கத்தில் அஜித், மம்முட்டி, தபு, ஐஸ்வர்யா ராய் நடித்த ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’படத்தில் ஐஸ்வர்யாராய் கேரக்டரில் நடிக்க முதலில் தன்னைத்தான் இயக்குனர் ராஜீவ் மேனன் அணுகியதாகவும், ஆனால் அப்போது தான் மலையாள படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும், நான் அந்த படத்தில் நடித்திருக்க வேண்டும் என்றும் மஞ்சுவாரியர் கூறியுள்ளார்.

Advertisement