விஜய்-அஜித்துடன் வாய்ப்பு வந்தால் யாருக்கு முதலில் ஓக்கே சொல்லுவீங்க..!

0
670
Manuma-mohan

சிம்பு நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘அச்சம் என்பது மடமையடா ‘ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மஞ்சுமா மோகன்.1998 களில் மலையாள சினிமாக்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்.

அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு மஞ்சுமா மோகனுக்கு விக்ரம் பிரபு நடித்த சத்திரியன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நடித்த இப்படை வெல்லும் போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.இந்த இரு படங்களில் நடித்த போதே சற்று உடல்பருமனக இருந்ததால் மேலும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையும் படியுங்க : விஜய்யை பார்த்தாலே எனக்கு புல்லரித்துவிடும்..! மஞ்சுமா நெகிழ்ச்சி.! 

- Advertisement -

தற்போது பட வாய்ப்புகளுக்காக உடலை குறைத்து வருகிறார். சமீபத்தில் நடிகை கீர்த்தி பிரபல தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் நடிகை மஞ்சுமா, கீர்த்தி சுரேஷுக்கு சர்ப்ரைஸாக போன் செய்திருந்தார்.

அப்போது நடிகை கீர்த்தி சுரேஷ் போனில் நடிகை மஞ்சிமாவிடம், அஜித்-விஜய் படங்கள் ஒரே நேரத்தில் வந்தால் யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்டார்.அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காமல் விஜய்யுடன் தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement