மஞ்சுமேல் பாய்ஸ் பட இயக்குனரின் அடுத்த படம் பற்றிய அப்டேட் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. மலையாள மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த படம் மஞ்சுமேல் பாய்ஸ். இந்த படத்தை சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி , மரியம் ஜார்ஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார்.

மலையாள ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படம் பாராட்டைப் பெற்றது. அதோடு மலையாளத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை இந்த படம் பெற்றது. தற்போது இந்த படத்தின் இயக்குநரின் அடுத்தப் படம் பாலன். இதை கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இதுதான் இவர்களின் முதல் திரைப்படம்.
மஞ்சும்மல் பாய்ஸ்:
மலையாள திரையுலகில் இயக்குநர் சிதம்பரம் (மஞ்சும்மல் பாய்ஸ்) மற்றும் எழுத்தாளர் ஜித்து மாதவன் (ஆவேஷம்) ஆகியோர் இணையும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் மூலம் திரு.வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் மற்றும் திருமதி ஷைலஜா தேசாய் ஃபென் சார்பில் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்துள்ளன.

இயக்குனர் சிதம்பரம் புது படம்:
பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்தப் படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணையும் முதல் திரைப்படம் "பாலன்" என்ற பெயரில் உருவாகிறது என்றும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியதாகவும் படக்குழு அறிவித்து இருக்கிறது.

படம் பற்றிய தகவல்:
இந்தப் படத்திற்கு ஷைஜூ காலித் ஒளிப்பதிவு பணிகளையும், இசையமைப்பாளராக சுஷின் ஷியாம் மற்றும் படத்தொகுப்பு பணிகளை விவேக் ஹர்ஷன் மேற்கொள்கின்றனர். "பாலன்" திரைப்படம் மூலம் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மலையாள திரையுலகில் களமிறங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தயாரிப்பு நிறுவனம்:
மலையாளம் மட்டுமின்றி 2025 ஆண்டிலேயே கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கே.டி. மூலம் கன்னட திரையுலகிலும், யஷ் நடிக்கும் டாக்சிக் திரைப்படம், தமிழில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் மற்றும் இந்தி திரையுலகில் பிரியதர்ஷனின் திரில்லர் திரைப்படம் ஆகியவற்றை தயாரித்து வருகிறது.






