கடந்த ஆண்டு விஜய் டிவியில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் நடிகர் கமல்ஹாசன் தான் அரசியலுக்கு வரப்போவதாக மறைமுகமாக அறிவித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் 11 சீஸன்களை கடந்து சென்றிருக்கிறது.ஆனால் தற்போது தான் தமிழில் பிக் பாஸின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மிகவும் பிரபலமான நடிகர்களையே முதலில் அணுகிவந்தனர் .இதன் இரண்டாம் பாகத்தை தொகுத்து வழங்க முதலில் விஜய் டிவியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நடிகர்கள் சூர்யா, அறிவிந்தசாமி ஆகிய நடிகர்களில் ஒருவர் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல்கள் வந்தது.
ஆனால் அதன் பின்னர் பிக் பாஸ் முதல் சீஸனை தொகுத்து வழங்கிய கமலஹாசனே இந்த சீஸனையும் தொகுத்துவழங்க இருப்பது உறுதியாகி இருந்தது.ஆனால் இதில் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் பங்கேற்க போகிறார்க்கள் என்ற எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வரவில்லை.
இந்நிலையில் பிக் பாஸ் 2 வின் ஒரு போட்டியக்ளராக சமூக வலைதளத்தின் லேஜன்ட்,பேரழகன்,சாக் லேட் பாய்,காதல் மன்னன்,டவிட்டர் உலகின் நாயகன் மண்ணை சாதிக் பங்குபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
English Overview:
There is a news spreading that Mannai sadique is going to participate in Bigg Boss 2 Tamil but this was not officially announced. So we need to wait till official announcement. To get latest Bigg Boss news, official participant list, thrilling activity inside Bigg Boss house and to save the participant from elimination just visit “Bigg Boss vote Tamil” link.