என்னை அந்த வார்த்தை கூற நீங்க யாரு .! மனோ பாலாவை வெளுத்து வாங்கிய நடிகை.!

0
1077
mano-bala
- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 7-ந் தேதி தொடங்குகியது. மனுதாக்கல் செய்ய 10-ந் தேதி கடைசி நாள். மனுக்களை 14-ந் தேதி வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை வெளியாகிறது.

-விளம்பரம்-

இந்த தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மீண்டும் நிற்கிறார். நடிகர் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகின்றனர்.

- Advertisement -

மேலும், செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகைகள் குஷ்பு, லதா, கோவை சரளா, ஸ்ரீமன், பசுபதி, ரமணா, நந்தா, தளபதி தினேஷ், சோனியா, குட்டி பத்மினி, பிரேம், ராஜேஷ், மனோபாலா, ஆதி, ஜெரால்டு, காளிமுத்து, ரத்னப்பா, எம்.ஏ.பிரகாஷ், அஜய்ரத்னம், பிரசன்னா, ஜூனியர் பாலையா போன்ற பல பிரபலங்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் விஷால் அணிக்கு ஆதரவாக உள்ள உள்ள பிரபல நடிகர் மனோ பாலா, தனியார் செய்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பிரபல நடிகையான குட்டி பதமினியை ஒருமையில் பேசியுள்ளார். இதனால் குட்டி பதமினி கடும் கோபம் அடைந்துள்ளார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இவர்கள் இருவரும் தனியார் செய்தி தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது மனோ பாலா என்னை அவ, இவ என்று தரைகுறைவாக பேசி விட்டு பின்னர் தனியாக போனில் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டார். என்னை அவள் என்று சொல்ல நீங்கள் யார் என்று மனோ பாலாவை வெளுத்து வாங்கியுள்ளார்.

Advertisement