திருமணமான அடுத்த நாளே மனோ பாலாவின் மருமகள் கையால் வந்த சிக்கல்.! கேட்டா சிரிப்பீங்க.!

0
1606
Mano-bala
- Advertisement -

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் திருமணம் நடைபெற்றது. இதே நாளில் பிரபல காமெடி நடிகரான மனோ பாலாவின் மகன் ஹரிஷ் மற்றும் பிரியா ஜோடியின் திருமணம் சென்னையில் நடைபெற்றது.

-விளம்பரம்-

சென்னை கிண்டியில் உள்ள பிரபல லீ ராயல் மெரிடியன் நட்சத்திர ஹோட்டலில் கடந்த 10 ஆம் தேதி காலை 7.19 மணிக்கு மணமகன் ஹரிஷ், மணமகள் பிரியா கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார். இந்த திருமணத்தில் பல்வேறு அரசியல் பிரபலங்களும், நடிகர்களும் கலந்து கொண்டனர்.

- Advertisement -

இந்த திருமணம் முடிந்த கையோடு திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய சென்றுள்ளனர். அப்போது மணமகள் பிரியா கை ரேகை வைக்க முயன்ற போது இயந்திரம் அவரது கட்டை விரல் ரேகையை எடுத்துக்கொள்ளவில்லை.

இதற்கு முக்கிய காரணமே மணமகள் பிரியா கையில் மருதாணி போட்டிருந்ததால் அவரது விரல் ரேகையை இயந்திரம் எடுத்துக்கொள்ளவில்லை. பின்னர் பல முறை அவரது விரலை கழுவி மருதாணியை நீக்கிய பினரே அவரது விரல் ரேகை இயந்திரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

-விளம்பரம்-

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மனோ பாலா, இந்த மாதிரி மெஹந்தி வைக்கும் பொழுது ஜாக்கிரதை..கட்டைவிரலில் வைத்தால் மேரேஜ் ரிஜிஸ்டரேஷன் கஷ்டமாகிவிடும்..மெஷின் ஏற்று கொள்ள மாட்டேன் என்கிறது..be careful ..கட்டைவிரல் தவிர மெஹந்தி வைத்து கொள்ளுங்கள்.. முக்கியமாக வெளிநாடு செல்பவர்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

Advertisement