மாடல் அழகியை கொலை செய்து உடலை சூட் கேசில் அடைத்த இளைஞர்.! ஷாக்கிங் பின்னணி.!

0
876
Mansi-Dixit
- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இளம் பெண்ணின் மும்பை மலாட் பகுதியில் உடல் சூட் கேசில் அடைக்கப்பட்டு வீதியில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் விசாரணையில் கொலை செய்யப்பட்ட அந்த பெண் மும்பையை சேர்ந்த மாடல் அழகி மான்சி என்பது தெரியவந்தது.

-விளம்பரம்-

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை சேர்ந்த மான்சி திக்‌ஷித் (வயது 20) மாடலிங் துறை கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள மும்பைக்கு குடிபெயர்ந்தார். அப்போது 19 வயது கல்லூரி மாணவர் முஸமில் சையத் என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.சம்பவம் நடந்த அன்று மலாத்தில் மான்சியை கொன்று அவரது உடலை சூட்கேசில் அடைத்து காரில் கொண்டு சென்றுள்ளார்.

- Advertisement -

அங்கு ஒரு இடத்தில் சூட்கேசை வீசிவிட்டு ஆட்டோவில் தப்பிச்சென்றுள்ளார். இதனை கார் ஓட்டுநர் கவனிக்க அவருக்கு கடும் சந்தேகம் எழுந்துள்ளது. போலீசாருக்கு தகவல் அனுப்பினார். போலீசார் வந்து சூட்கேசை கைப்பற்றி, கொலையை உறுதி செய்ததோடு சிசிடிவி காமிரா பதிவுகளையும், கார் ஓட்டுநரின் உதவியுடனும் சையத்தை கைது செய்தனர். வழக்குப்பதிவு செய்து கொலைக்கு வேறு காரணங்கள் உண்டா, பின்னணியில் யார் என்று துருவித்துருவி விசாரித்தனர். 

மும்பையில் கொல்லப்பட்ட மாடல் அழகி பாலியல் உறவுக்கு மறுத்ததால் கொல்லப்பட்டுள்ளார் என இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்பட கலைஞராக பணியாற்றிய சையத் புகைப்படம் எடுப்பதற்காக மான்சி திக்‌ஷித்தை அழைத்துள்ளார். அப்போது பாலியல் உறவு வைத்து கொள்வதற்காக அழைத்துள்ளார். அதற்கு மான்சி மறுக்கவும் கட்டாயப்படுத்தியுள்ளார். மான்சி சம்மதம் தெரிவிக்காத நிலையில் அவரை மர ஸ்டூலால் தாக்கியுள்ளார் என்று போலீஸ் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

Advertisement