கட்டாயப்படுத்தி குடுத்தாங்க, குடிச்சதும் மயக்கம்,அடி நெஞ்சு தாங்க முடியாத வலி – மன்சூர் அலிகான் வெளியிட்ட பரபாப்பு அறிக்கை.

0
165
- Advertisement -

பிரச்சாரத்தின் இடையே உடல் நிலை சரியில்லாமல் போன மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு விஷம் கொடுக்கப்பபட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் தனது உடல் நிலை குறித்து மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் பலவும் தங்கள் பிரச்சாரத்தை தீவிரமாக செய்து முடித்துள்ளனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் இந்தியப் புலிகள் ஜனநாயக கட்சித் தலைவருமான மன்சூர் அலிகான் அவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். ஆரம்பத்தில் நாம் தமிழர் கட்சியில் இருந்த மன்சூர் அலிகான் இந்தியப் புலிகள் ஜனநாயக கட்சியை தொங்கினார். சமீபத்தில் தான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் அவசர செயற்கைக் குழு கூட்டம் சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் நடைபெற்றிருக்கிறது.

- Advertisement -

இந்த கூட்டத்தில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகானை நீக்கி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், கட்சியின் தலைவர் நான் தான் என்று தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார் மன்சூர் அலிகான். அந்த வகையில் வேலூர் தொகுதியில் சுயேச்சை சின்னமான பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபாடு வந்தார்.

பிரச்சாரத்தின் இறுதி நாளான நேற்று வேலூர் தொகுதியில் கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மன்சூர் அலிகான் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அங்குள்ள மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டு, சென்னையில் அட்மிட் ஆக, குடியாத்ததில் இருந்து, ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டார். பின்னர் சென்னை கே.கே.நகர் KM Hospital -லில், மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக புதிய சர்ச்சை கிளம்பியது. இப்படி ஒரு நிலையில் தனது உடல் நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மன்சூர் அலிகான் ‘நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க… குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன்… மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி, பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, Treatmet குடுத்தும் வலி நிக்கல.

அதிகமாக சென்னைக்கு K.M. நர்ஸிங் ஹோம்க்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து, டாக்டர் பாலசுப்ரமண்யன் ஐ.சி.யூல அட்மிட் பண்ணி, இப்ப கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக Trips குடுத்தார்கள். இன்று மதியம் 2′ மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுகிறது’ என்று ன்சூர் அலிகான், தனது பிஆர்ஓ கோவிந்தராஜ் மூலம், பத்திரிகை மற்றும் மீடியாக்களுக்கு அறிக்கை கொடுத்துள்ளார்.

Advertisement