என் பையன காப்பாத்தணும்னு சொல்ல வரல, ஆனால் – மகன் கைது குறித்து மன்சூர் அலிகான் சொன்ன விஷயம்

0
178
- Advertisement -

தன்னுடைய மகன் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே மன்சூர் அலிகான் மகன் குறித்த செய்தி தான். சமீப காலமாகவே போதைப்பொருளை ஒழிப்பதில் இந்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு போதைப் பொருள் கடத்தலை தடுக்க தீவிரம் காட்டி வருகிறது. இதனால் ஆங்காங்கே போதை பொருள் கடத்தல் கும்பலையும் கைது செய்து இருக்கிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் கூட தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் ஒருவர் இந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் மன்சூர் அலிகான் மகனும் போதைப் பொருள் வழக்கில் கைதாகி இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாபிக்கே.
சமீபத்தில் சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதைப் பொருள்கள் விற்பனை செய்து இருக்கிறார்கள். இதை அறிந்த போலீஸ் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருக்கிறது.

- Advertisement -

மன்சூர் அலிகான் மகன் கைது:

இதனால் கடந்த மாதமே சில கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டு இருந்தார்கள். இந்த வழக்கில் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துலக் சிக்கியிருக்கிறார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து துலக்கை போலீசார் கைது செய்து இருந்தார்கள். இதை அடுத்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்துக்கு அவரை அழைத்து சென்று விசாரணையும் நடத்தி வருகிறார்கள். இதை அடுத்து விசாரணைக்கு தன்னுடைய மகனை போலீஸ் வேனில் அழைத்து செல்லும்போது மன்சூர் அலிகான், ஏன் தப்பு பண்ற, தைரியமாய் இரு, சாப்டியா என்று அறிவுரை சொல்லி இருந்தார்.

மன்சூர் அலிகான் பேட்டி:

இந்நிலையில் தன்னுடைய மகன் கைது செய்த விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டியில் மன்சூர் அலிகான்,
இந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கு இரண்டு மாதமாக நடக்கிறது. அதில் சில மாணவர்களை கைது இருந்தார்கள். அதில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவருடைய போனில் என்னுடைய மகன் நம்பர் இருந்திருக்கிறது. அதை வைத்து தான் என்னுடைய மகனையும் கைது செய்து இருக்கிறார்கள். என்னுடைய மொபைலில் கூட தான் நிறைய நடிகைகள் உடைய நம்பர் இருக்கிறது. அதற்காக தவறாக சொல்ல முடியுமா?
நான் என் மகனை காப்பாத்தணும் என்று சொல்ல வரவில்லை.

-விளம்பரம்-

தன் மகன் குறித்து சொன்னது:

ரன் மகன் சிகரெட் பிடிப்பான் என்று இப்போ தான் தெரிகிறது. இண்டு, இடுக்கு, பள்ளி, கல்லூரி, சந்தை மார்க்கெட் என தமிழ்நாடு முழுவதும் போதை பொருள் எப்படி வந்தது? கிலோ கணக்கில் பிடிக்கிறார்கள், கோடிக்கணக்கில் பிடித்ததாக சொல்கிறார்கள், அதெல்லாம் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? எங்கு தான் போகிறது. இதனால் இளைஞர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சொல்லியுமே எந்த ஒரு நடவடிக்கை அரசு எடுக்கவில்லை.

படம் குறித்து சொன்னது:

நான் இந்த போதை பொருள் சம்மந்தமாக மூன்று கோடி ரூபாய் செலவு செய்து சரக்கு என்ற படத்தை எடுத்தேன். ஆனால், அந்த படத்தை வெளியில் விட சரியான தியேட்டர் கிடைக்கவில்லை. ஓடிடியில் விடலாம் என்று நினைத்தாலுமே அந்த படத்தை வெளியிடாமல் தடுத்தார்கள். அந்த படத்தை தமிழ்நாட்டிலேயே வெளியிடக்கூடாது என்று தடை செய்தார்கள். இப்படி எல்லாம் இருந்தால் எப்படி போதைப் பொருளை ஒழிக்க முடியும். அரசாங்கம் என்னதான் செய்கிறது என்று பேசி இருக்கிறார்.

Advertisement