தன்னுடைய வளர்ப்பு செல்லப் பிராணி அநியாயமாக உயிரிழந்ததால் வீட்டுக்குள் செல்ல மன்சூர் அலி கான் மறுத்து இருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் ரஜினி, விஜயகாந்த், கமல்,விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.
பின் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இதனிடையே சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் மேற்கே உள்ள பகுதியில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு வீடு உள்ளது. இந்த வீடு அரசு புறம்போக்கு நிலம் 2500 சதுர அடியை ஆக்கிரமித்து கட்டி இருப்பதாகவும், இங்கு பல ஆண்டுகளாக இவர்கள் இருந்து வந்ததாகவும் புகார் எழுந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
பின் அதன் காரணமாக அரசு நிலத்தை மீட்கும் பொறுப்பில் கடந்த மாதமே அவருடைய வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலி கான் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனிடையே தனது வீட்டுக்குள் மாட்டிக்கொண்ட வளர்ப்பு பூனையை மீட்க வீட்டைத் திறக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், மன்சூரலிகான் கோரிக்கையை ஏற்று ஒரு மணி நேரம் மட்டும் வீட்டைத் திறக்க நீதிபதி அனுமதி அளித்திருந்தார்.
ஆனால், ஒரு மாதமாக பூனை வீட்டுக்குள் உணவின்றி இருந்ததால் உயிரிழந்து இருக்கிறது. இந்த நிலையில் தனது வீட்டை திறக்க வேண்டாம் என மனமுடைந்து மன்சூர்அலிகான் மறுப்பு தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த வழக்கை நான் சும்மா விடமாட்டேன், உச்ச நீதிமன்றம் மூலம் சந்திக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.