வணங்கான் பட விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் பாலாவும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனரான பாலு மகேந்திராவின் படைப்பில் இருந்து உருவாக்கப்பட்டவர். அதுமட்டுமில்லாமல் பாலா சினிமா உலகில் இயக்குனர் ஆன முதல் படத்திலேயே தேசிய விருது பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலா இயக்குனர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். தற்போது இவர் வணங்கான் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஹீரோவாக அருண் விஜய் நடித்து இருக்கிறார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி, இயக்குனர் பாலாவும் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஜான் விஜய், மிஷ்கின், ராதாரவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
பாலா 25 மற்றும் வணங்கான் நிகழ்ச்சி:
மேலும், கடந்த மாதம் இப்படத்தின் இசை வெளியீடு விழாவும், பாலாவினுடைய திரைப்பயணம் தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ‘பாலா 25’ விழாவும் சென்னையில் நடைபெற்று இருந்தது. இதில் வணங்கான் படக்குழுவுடன் சிவக்குமார், சூர்யா, விக்ரமன், மிஷ்கின், சமுத்திரக்கனி, சிவகார்த்திகேயன், மாரி செல்வராஜ் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது விழாவில் மன்சூர் அலிகான், பாலாவுடைய எல்லா படத்தையும் நான் பார்த்திருக்கிறேன்.
விழாவில் மன்சூர் அலிகான்:
அது திகட்டனதே கிடையாது. அவன் இவன் படத்தில் விஷால் ஆடின மாதிரி அப்படியே திரும்ப ஆட முடியுமா? என்பது எனக்கு சந்தேகம் தான். அந்த அளவிற்கு ஆட வைத்திருப்பார். பிதாமகன் படத்தில் சிவகுமார் சாரின் வசனத்தை பேசி நடிக்க வைத்திருப்பார். பாலா படங்களை எத்தனை முறை டிவியில் போட்டாலும் வைத்த கண் வாங்காமல் வீட்டில் பல வேலைகள் இருந்தாலுமே பார்த்துக் கொண்டே இருப்பேன். தாரை தப்பட்டை என்னும் ஒரு படம். சரத்குமார் சார் பொண்ணு, சசிகுமார் இவங்க எல்லோருமே நடித்த மாதிரியே சொல்ல முடியாது.
பாலா படங்கள் பற்றி சொன்னது:
அந்த அளவிற்கு படம் இருந்தது. பாலா ஒரு யுனிவர்சல் டைரக்டர்ன்னு சும்மா சொல்லக்கூடாது. வடமாநில தொழிலாளர்கள் எல்லோருமே இங்கே வந்து வேலை செய்கிறார்கள். இங்கிலீஷ்காரங்க நம்மளை அடக்கி ஆண்டார்கள். அந்த மாதிரி இங்கிலீஷ் நடிகர்களை இங்கு கூட்டிட்டு வந்து பாலா ஐயாவிடம் விடுங்கள். சும்மா சுளுக்கு எடுக்கணும். இங்கிலீஷ் படம் நிறைய பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு நடிக்கவே தெரியல.
பாலா குறித்து சொன்னது:
அவங்களையெல்லாம் கொண்டு வந்து பாலாவிடம் விடுங்க. நன்றாக சுளுக்கெடுப்பார். நல்ல படங்களை தருவார். ஏஞ்சலினா ஜோலி மாதிரி நிறைய படங்கள் மிஸ்கின் பார்ப்பார். சீரியஸாக நான் பேசுறேன். தமிழ்நாடு இயக்குனர் சங்கம் மொத்தமும் இங்குதான் நிற்கிறது. எந்தக் கட்டுக்குமே அடங்காத மாமனிதன் பாலா. அப்படித்தான் இருக்கணும். அந்த பிடிவாதம் அவரிடம் இருக்கணும் என்று பல விஷயங்களை பேசி இருந்தார்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.