கன்னிப்பெண் வழக்கு : 25 ஆண்டுகளுக்கு முன்பே 7 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள மன்சூர் அலிகான். பகீர் பின்னணி.

0
439
- Advertisement -

இளம் வயது பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் மன்சூர் அலிகானுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் மன்சூர் அலிகான் குறித்த சர்ச்சை தான் ட்ரெண்டிங் ஆகி கொண்டு இருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மன்சூர் அலிகான், இப்போதெல்லாம் படத்தில் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை. படத்தில் நானும் திரிஷாவும் இருக்கிறோம். லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம். அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன்.

-விளம்பரம்-

குஷ்பு, ரோஜாவை எல்லாம் அப்படி செய்துள்ளேன். ஆனால், இங்கே அப்படி காட்சி இல்லை. எனக்கு வில்லன் ரோல் கொடுப்பது இல்லாது. இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை என்று கூறி இருந்தார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், தேசிய மகளிர் ஆணையமானது நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. பின் நடிகர் சங்கம், திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

- Advertisement -

மன்சூர் அலிகான்-திரிஷா சர்ச்சை:

மேலும், இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று டிஜிபிக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதனை அடுத்து ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக மன்சூர் அலிகான் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தார்கள். பின் நேற்று மதியம் 2:30 மணிக்கு ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் அதிரடியாக ஆஜராகி இருந்தார்.

மன்சூர் அலிகான் மீது புகார்:

அப்போது அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இப்படி திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய நாளிலிருந்து திரை உலகில் நடிகைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் மன்சூர் அலிகானுக்கு பாலியல் பலாத்கார வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் தான் வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், கடந்த 1996 ஆம் ஆண்டு சினேகா சர்மா என்ற ஒரு பெண் மன்சூர் அலிகான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சினேகா ஷ்ரமா கொடுத்த புகார்:

இவர் மன்சூர் அலிகான் உதவியாளராக இருந்தவர். இந்த சம்பவத்தின் போது சினேகா சர்மாவுக்கு 23 வயது தான். புகாரில் அவர், மன்சூர் அலிகான் என்னிடம் அடிக்கடி மோசமாக நடந்து கொள்கிறார். ஒரு நாள் ஜூஸில் மாத்திரை கலந்து கொடுத்து பலாத்காரம் செய்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டார் என்றெல்லாம் கூறி இருந்தார். இது தொடர்பான வழக்கு 1998 ஆம் ஆண்டு போடப்பட்டிருந்தது. அப்போது சினேகா சர்மாவுக்கு குழந்தை ஒன்றும் பிறந்தது. இதை தொடர்ந்து மன்சூரை போலீசார் கைது செய்திருந்தார்கள். இந்த வழக்கில் மன்சூர் அலிகானுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் கொடுத்து மூன்று லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், அந்த தண்டனையில் மன்சூர் அலிகான் நீண்ட காலம் சிறையில் இருக்கவில்லை என்பதுதான் உண்மை.

மன்சூர் தொடுத்த வழக்கு:

பின் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அப்போதுதான் அவருடைய சிறை தண்டனை நீக்கப்பட்டது. சினேகா சர்மாவிற்கு 3.5 லட்சமும், பெண் குழந்தைக்கு ஏழு லட்சமும் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு போட்டது. ஆனால், 1995 ஆம் ஆண்டு சினேகா சர்மா மீது சிவசுரேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், சினேகா சர்மாவிற்கும் தனக்கும் திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது. எங்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்றெல்லாம் கூறியிருந்தார். இதை மன்சூர் அலிகான் வழக்கறிஞர் கண்டுபிடித்து கோர்ட்டில் சமர்ப்பித்திருந்தார். பின் இது குறித்து மன்சூர், சினேகா சர்மா கன்னிப்பெண் தான் என்ற என்ற ஆதாரம் வேண்டும். ஆனால் அவருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கிறது. எனக்கு எதிராக அவர் தொடுத்த வழக்கு பொய். என் மீது அவமதிப்பு ஏற்படுத்தவே அவர் இப்படி வழக்கை தொடர்ந்து இருக்கிறார். எனக்கு நிறைய மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சினேகா சர்மா எனக்கு 50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றெல்லாம் கூறினார். ஆனால், இதற்கு சினேகா சர்மா எந்த ஒரு பதிலையும் கொடுக்கவில்லை.

Advertisement