இனிமேல் நடிகைகள் பற்றி பேசமாட்டீங்களா? – செய்தியாளர் கேள்வியால் கடுப்பான மன்சூர் அலிகான்.

0
462
- Advertisement -

தற்போது சோசியல் மீடியா முழுவதும் மன்சூர் அலிகான் குறித்த சர்ச்சை தான் ட்ரெண்டிங் ஆகி கொண்டு இருக்கிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற மன்சூர் அலிகான், இப்போதெல்லாம் படத்தில் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை. படத்தில் நானும் திரிஷாவும் இருக்கிறோம். லியோவில் அவரை கட்டிலில் தூக்கி போடலாம். அப்படி ஒரு காட்சி இருக்கும் என்றெல்லாம் நினைத்தேன். குஷ்பு, ரோஜாவை எல்லாம் அப்படி செய்துள்ளேன். ஆனால், இங்கே அப்படி காட்சி இல்லை.

-விளம்பரம்-

எனக்கு வில்லன் ரோல் கொடுப்பது இல்லாது. இப்போதெல்லாம் பலாத்கார காட்சிகளை வைப்பது இல்லை என்று கூறி இருந்தார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், தேசிய மகளிர் ஆணையமானது நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. பின் நடிகர் சங்கம், திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

- Advertisement -

மன்சூர் அலிகான் மீது புகார்:

மேலும், இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று டிஜிபிக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதனை அடுத்து ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பின் இந்த வழக்கு தொடர்பாக மன்சூர் அலிகான் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருந்தார்கள்.

ஆஜரான மன்சூர் அலிகான்:

இதனால் மன்சூர் அலிகான் தலைமறைவாகி விட்டதாக எல்லாம் சோசியல் மீடியாவில் வதந்திகள் பரவி இருந்தது. இந்நிலையில் இன்று மதியம் 2:30 மணிக்கு ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் அதிரடியாக ஆஜராகி இருந்தார். அப்போது அவர், உடல்நிலை சரியில்லை என்றாலும் நான் விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறேன். முன் ஜாமின் வாங்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றிருக்கிறேன்.

-விளம்பரம்-

மன்சூர் அலிகான் அளித்த பேட்டி:

பயந்து போய் தலைமறைவாகும் ஆள் நான் இல்லை என்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து சுமார் ஒன்றரை மணி நேரம் மன்சூர் அலிகான் இடம் போலீசார் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். விசாரணை முடிந்து வெளியே வந்த மன்சூர் அலிகான் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார். பின் அவர்கள் கேட்ட கேள்விக்கும் பதில் அளித்து இருக்கிறார். அதில் மன்சூர் அலிகான், நான் திரிஷா என்பவரை பற்றி தனிப்பட்ட முறையில் பேசவில்லை.

திரிஷா குறித்து சொன்னது:

ஒரு நடிகையாக அவரை நான் மிகவும் மதிக்கிறேன். போலீசார் திரிஷா குறித்து அவதூறாக பேசிய வீடியோ குறித்து என்னிடம் பல கேள்விகளை எழுப்பி இருந்தார்கள். நான் வீடியோவை முழுதாக பாருங்கள் என்று அறிவுருத்தினேன். என்னை பழிவாங்கும் நோக்கில் தான் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. நீங்கள் செய்ததற்கு தான் நான் இங்கே வந்து நிற்கிறேன் என்று கையெடுத்து கும்பிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

Advertisement