உலகை சுற்றி வந்த சாதனை பெண்ணின் இன்ஸ்டா ஸ்டோரியில் அஜித் – என்ன சொல்லியிருக்கார் பாருங்க.

0
660
ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித், நடிப்பையும் தாண்டி கார் பைக் என்றால் எவ்வளவு பிரியம் என்பது அவரது ரசிகர்கள் அறிவார்கள். காரை விட இவருக்கு பைக் தான் மிகவும் பிடித்த விஷயம். அஜித் படம் என்றாலே கார் அல்லது பைக் காட்சிகள் நிச்சயம் இடம்பிடித்துவிடும். வலிமை படத்தில் கூட பைக் மற்றும் கார் காட்சிகள் அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ரஸ்யாவில் நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது.

-விளம்பரம்-
மேரல் யாஸர்லூவுடன் அஜித்

ஆனால், உடனடியாக இந்தியா திரும்பாமல் ரஸ்யாவில் சில நாட்கள் தங்கி பைக் மூலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் நடிகர் அஜித் 5000 கிலோ மீட்டர் பயணம் செய்தார் என்றும் கூறப்பட்டது. இதை தொடர்ந்து இந்தியா திரும்பிய அஜித் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த பைக் ஷோவில் கலந்து கொண்டார். சமீபத்தில் நடிகர் அஜித் டெல்லியில் ஒரு பெண்ணுடன் எடுத்த புகைப்படம் வைரலானது. அந்த பெண் யார் என்று பலரும் தேடினர்.

இதையும் பாருங்க : 2021 எனக்கு ராசியே இல்ல, ஜஸ்ட் மிஸ்ல உயிர் பிழச்சி இருகேன் – கார் ஓட்டி விபத்தில் சிக்கிய மணிமேகலை.

- Advertisement -

அவர் பெயர் மேரல் யாஸர்லூ. ஈரானைச் சேர்ந்த இவர் ரு ஃபேஷன் டிசைனர். மேலும், ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் லட்சங்களில் சம்பளம் வாங்கும் துணைத் தலைவர் பதவியில் இருக்கிறார். சூப்பர் பைக்கில் உலகம் முழுதும் சுற்றிய ஒரு சாதனை பெண். இதுவரை 7 கண்டங்களையும் 64 நாடுகளையும் பைக்கிலேயே சுற்றிய மாரல் யசார்லூ 1,10,000 கிமீ பைக்கை சோலோவாக ஓட்டிய சாதனை பெண்.

ஆப்பிரிக்காவில்...

இப்படி ஒரு நிலையில் இவர் இந்தியா வந்துள்ளார். அந்த சமயத்தில் அஜித்தும் டெல்லியில் இருந்துள்ளார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு, டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் இவரை சந்தித்து பேசியுள்ளார். தனது லடாக் பயணம், வட இந்தியப் பயணம், லேட்டஸ்ட்டாக இத்தாலி பயணம் என பைக்கிலேயே 10,000 கிமீ சுற்றிவந்த கதை என்று பல விதமாக பைக் சம்மந்தப்பட்ட விஷயங்களை பேசினாராம் அஜித்.

-விளம்பரம்-

மேலும், அவரிடம் பெற்ற சில டிப்ஸ்களை தன்னுடைய அடுத்த சோலோ பைக் ரைடில் பயன்படுத்திக்கொள்ள திட்டம் தீட்டியுள்ளாராம். இப்படி ஒரு நிலையில் மேரல் யாஸர்லூ, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித்துடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ‘இதைப்பற்றி நான் விரைவில் எழுதுகிறேன் உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி என்னுடைய வேர்ல்ட் ரைட் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி’ என்று பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் மேரல் யாஸர்லூவின் அந்த பதிவை எதிர்நோக்கி காத்துகொண்டு இருக்கின்றனர்.

Advertisement