ஆண்டின் கடைசியில் மாஸ் காண்பித்த கருடன் பட நடிகரின் ‘மார்கோ’ – பின்னி எடுக்கும் வசூல்

0
100
- Advertisement -

மலையாளத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி வெளியான படம் தான் ‘மார்கோ’. இந்தப் படத்தை இயக்குனர் ஹனிப் இயக்கியிருக்கிறார். கே ஜி எஃப் மற்றும் சலாம் படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்சூர் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த திரில்லர் படமான இந்த மார்கோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

-விளம்பரம்-

கதைக்களம்:

மார்கோவும், அவரது அண்ணனும் தங்க கடத்தல் தொழில் செய்து வருகின்றனர். அதேபோல் கடத்தல் தொழிலில் உள்ள நபர் தனது சகோதரரை கொலை செய்ததை மார்கோவின் தம்பி கண்டுபிடிக்கிறார். இதனால் அவரும் கொல்லப்பட்ட பின்னர் பழி வாங்கும் படலமாக மார்கோ களத்தில் இறங்குகிறார். அடுத்து நடக்கும் ரத்தக்களறியான சம்பவங்களே இந்த படத்தின் மீதி கதை. விறுவிறுப்பான திரைக்கதையால் இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

- Advertisement -

மார்கோ படம் :

மேலும், நாளுக்கு நாள் இந்தப் படத்தை திரையிடும் தியேடர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் நடிகர் உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான ‘கருடன்’ திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழ் அளித்திருக்கிறது. மலையாளத்தில் இந்த திரைப்படம் வெளியானாலும் மற்ற மொழிகளிலும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மார்கோ வசூல் :

முதல் நாளில் மட்டும் இந்த திரைப்படம் ரூபாய் 11 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதோடு இப்படம் வெளியான 10 நாட்களில் மட்டும் சுமார் 65 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்திருப்பதாகவும் தெரிகிறது. இப்படம் ஆங்கில படமான ஜான்விக் போல ஆக்சன் நிறைந்த படமாக இருக்கிறதாம். மேலும், படத்தில் உன்னி முகுந்தன் மிரட்டலான ஆக்சன் ஹீரோவாக மிரட்டி உள்ளாராம். இந்த படத்தின் பின்னணி இசையும், ஒளிப்பதிவையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-

உன்னி முகுந்தன் :

இந்த படத்தின் நாயகன் உன்னிக்கு இந்த பாத்திரம் மாலிக்காபுரம், மேம்பட்டியான் மற்றும் ஜெயகணேஷ் போன்ற சமீபத்திய படங்களில் அவரது பாதரத்தில் இருந்து ஒரு மாற்றம், அது மிகவும் கடுமையானது. மிகவும் ஸ்டைலான மார்கோ. அதிக சாம்பல் நிற நிழல்களைக் கொண்டுள்ளது. அவர் தனது மகிழ்ச்சியற்ற தன்மையையும் கோபத்தையும் ஒரு கேடயமாக இந்த படத்தில் அணிந்துள்ளார்.

Advertisement