தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். முதலில் இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படமும் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

இதனை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வைகை புயல் வடிவேலு, பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படத்தை பார்த்து பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இதை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்து இருந்த படம் ‘வாழை’.
மாரி செல்வராஜ் திரையப்பயணம்:
இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உட்பட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். மாரி செல்வராஜ், தன் இளம் வயதிலிருந்து தான் சந்தித்த ஜாதி, மதம் பாகுபாடுகளை மையமாக வைத்து வாழை என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.

மாரி செல்வராஜ் இயக்கும் படங்கள்:
தற்போது மாரி செல்வராஜ் அவர்கள் துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை எடுத்து வருகிறார்.
இந்த படம் மணத்தி கணேசன் என்ற கபடி வீரர் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தினுடைய இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

தனுஷ்-மாரி செல்வராஜ் கூட்டணி:
இந்த படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து மாரி செல்வராஜ் அவர்கள் தனுஷினுடைய 56வது படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ஐசரி கணேஷனின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் நடந்த விருது விழா நிகழ்வில் மாரி செல்வராஜ் பேசி இருக்கும் விஷயம் தான் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதில் அவர், பைசன் படத்திற்கு பிறகு நான் தனுஷ் வைத்து படம் இயக்க இருக்கிறேன்.
https://www.youtube.com/watch?v=1CPNLHDdVaI
படம் பற்றி சொன்னது:
கர்ணன் படத்தின் போதே நாங்கள் இன்னொரு படத்தில் சேர்ந்து பணியாற்றுவது தொடர்பாக பேசிக்கொண்டோம். ஆனால், சில காரணங்களால் அது தள்ளி போனது. இது பெரிய பட்ஜெட் படம். எளிமையான கதை தான். இருந்தாலும் பெரிய படமாக பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்ட படம். இது என்னுடைய வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான படம். இந்த படத்தினுடைய வேலைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இது என்னுடைய மைல்கல் திரைப்படம் என்று பேசியிருக்கிறார்.






