நான் ரெண்டு பேரை உருவாக்கி இருக்கிறேன், அவர்களும்- ‘வாழை’ வெற்றி விழாவில் மாரி செல்வராஜ் உருக்கம்.

0
325
- Advertisement -

‘வாழை’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசிய விஷயங்கள் தான் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அதன் பின் 2018ல் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் அறிமுகமானார். அதற்குப் பிறகு கர்ணன், மாமன்னன் போன்ற வெற்றி படங்களை இயக்கினார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இவர் இயக்கிய ‘வாழை’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மாரி செல்வராஜ் தன் இளம் வயதில் இருந்து தான் சந்தித்த ஜாதி, மதம் பாகுபாடுகளை பயமாக வைத்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது.

- Advertisement -

வாழை வெற்றி விழா:

இந்த வெற்றி விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு விழாவில் கேடயம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மாரி செல்வராஜ், முதலில் நான் தமிழ் திரையை உலகத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இந்தப் படத்தை ப்ரொமோட் செய்வதற்காக, தமிழ் சினிமா இண்டஸ்ட்ரிக்கு காட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். நான் அழைத்த அத்தனை பேரும் இந்த படத்தை பார்த்து பாராட்டினார்கள். வாழை படத்தின் வெற்றிக்கு காரணமே எனது முந்தைய படங்களின் தயாரிப்பாளர்கள் தான்.

மாரி செல்வராஜ் பேசியது:

அவங்களோடு நான் படம் பண்ணும் போது, எனக்கு ரொம்ப சுதந்திரம் கொடுத்தாங்க. நான் மக்களிடம் போய் சேருவதற்கு காரணமா இருந்தவர்கள் இந்த தயாரிப்பாளர்கள் தான். என்னுடைய படத்தில் ஃபைட் சீன்களுக்கு பெரிய வேல்யூ இருக்காது. அந்த சண்டைக்காட்சிக்குள்ள ஒரு சீன் வைத்து விடுவேன். அதுக்காக இடமும் கொடுத்து திலீப் சுப்புராயன் மாஸ்டர் வேலை பார்ப்பாரு. ஒரு நல்ல படம் எனக்கு இவரை மாதிரியான நல்ல நண்பர்களை கொடுத்திருக்கு.

-விளம்பரம்-

விமர்சனங்களுக்கு பதில்:

மேலும். படம் பார்த்துவிட்டு, பூங்கொடி டீச்சர் ஏன் கிளைமாக்ஸ் இல் வரலைன்னு கேக்குறாங்க. உண்மையாகவே டீச்சருக்கு டேட் இல்லை. படம் எடுத்து முடிச்சிட்டு ரொம்ப நாள் கழிச்சு தான் பாதவத்தி பாடல் எடுத்தோம். கடைசியில் அம்மா மடியில் சிவனணைந்தன் படுத்திருப்பான். அதுக்கு பதிலாக டீச்சர் மாடியில் படுத்து இருக்கிற மாதிரி தான் அந்த காட்சி இருந்திருக்கணும். அது இருந்திருந்தால் இப்ப பலர் வைக்கிற மோசமான குற்றச்சாட்டுக்கு பதிலாக இருந்திருக்கும். இப்போ நான் இந்த படத்தின் மூலம் இரண்டு பேரை உருவாக்கிட்டேன். அவர்கள் அடுத்த ரெண்டு பேரை உருவாக்குவாங்க.

வாழை 2 குறித்து:

மேலும், இந்த படத்தின் மூலம் இஸ்லாமிய தோழர்கள் தான் காப்பாற்றினாங்க என்கிற உண்மை வெளியே தெரிஞ்சிருக்கு. அன்னைக்கு மக்களை காப்பாற்றிய அனைவருக்கும் நன்றி. என்னுடைய வெற்றியின் வேர் என்னுடைய மனைவி கிட்ட தான் இருக்கு. என் தந்தை, தாயை ஏன் இப்படி கஷ்டப்படுத்துறாங்க என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போ 30 வருஷத்துல இங்க வந்து, இந்த கலையின் வடிவில் தான் எனக்கும் எங்க அம்மாவுக்குமான உறவு என்பதை புரிந்து கொண்டேன். ‘வாழை 2’ கண்டிப்பாக எடுப்பேன். இதுக்கு பின்னாடி இருக்கிற கதையை சிவனணைந்தனை வைத்து எடுப்பேன். அது இன்னும் என்னை நீங்க புரிந்து கொள்ள வழி வகுக்கும் என்று கூறியுள்ளார்.

Advertisement