வாழை படம் தொடர்பாக சிவகார்த்திகேயனின் வாழ்த்து பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். தற்போது சோசியல் மீடியா முழுவதும் வாழை படம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தற்போது மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்து இருக்கும் படம் ‘வாழை’. இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு தேனி மலர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் தான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மாரி செல்வராஜ் இளம் வயதிலிருந்து சந்தித்த ஜாதி, மதம் பாகுபாடுகளை மையமாக வைத்து வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது.
வாழை படம்:
இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலருமே மாரி செல்வராஜை நேரில் சந்தித்து பாராட்டி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சில பிரபலங்கள் சோசியல் மீடியாவிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் மாரி செல்வராஜை வாழ்த்தி வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவை மாரி செல்வராஜ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். ஆனால், அந்த பதிவுக்கான கமெண்ட் பகுதியில் வெரிஃபைட் அக்கவுண்ட் மட்டுமே பதிலளிக்கும் வகையில் கட்டுப்பாடு செய்திருக்கிறார்.
மாரி செல்வராஜ் செய்த வேலை:
மேலும் மாரிசெல்வராஜ், அவருடைய சில பதிவுகளுக்கு அனைவரும் கமெண்ட் போடும் விதத்திலும், சில பதிவுகளுக்கு மட்டும் வெரிஃபைட் அக்கவுண்ட் போடும் வகையிலும் செட்டிங்ஸ் செய்து வைத்திருக்கிறார். காரணம், சர்ச்சைகளில் இருந்து ஒதுங்கி இருப்பதற்காகவும், பிரபலங்களுக்கு பிரச்சனை உருவாகாமல் இருப்பதற்காக தான் இதை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பு:
மேலும், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த படம் ‘கொட்டுக்காளி’. இப்படத்தை இயக்குனர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே ‘கூலாங்கல்’ என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொடுக்காளி படம்:
இப்படத்தில் சூரி, அன்னா பென் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுக்களை பெற்று இருந்தது. அதோடு வாழை படம் வெளிவந்த உடன் ‘கொட்டுக்காளி’ படம் வெளிவந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.