தென் மாவட்டங்களில் உளவியல் ரீதியாக ஜாதி இருக்கிறது, இப்படி செய்தால் அடுத்த தலைமுறையில் மாற்றம் வரும் – இயக்குனர் மாரி செல்வராஜ் பேட்டி

0
386
- Advertisement -

ஜாதி குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018ல் ‘பரியேறும்’ பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படமும் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து கடந்த ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வைகை புயல் வடிவேலு , சுரேஷ், பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.

- Advertisement -

மாரி செல்வராஜ் குறித்த தகவல்:

இந்த படத்தை பார்த்து முதல்வர் மு. க. ஸ்டாலின், ரஜினிகாந்த், கமலஹாசன், தனுஷ் உட்பட பல பிரபலங்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இதை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வாழை’. இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது முழுக்க முழுக்க சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியே இவர் துருவ் விக்ரமை வைத்தும் படம் இயக்குகிறார்.

மாரி செல்வராஜ்-துருவ் கூட்டணி:

இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு பைசன்-காளமாடன் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த படம் மணத்தி கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இப்படி இவர் இயக்கிய படங்கள் எல்லாம் அவர் பிறந்து வளர்ந்த பகுதிகளை மையமாக வைத்து தான் எடுத்திருக்கிறார். அதோடு இவர் ஜாதி ரீதியிலான படங்களை தான் கொடுக்கிறார் என்று பலரும் கூறுகிறார்கள்.

-விளம்பரம்-

மாரி செல்வராஜ் பேட்டி:

இதனிடையே இவர் தேவர்மகன் பற்றி விழாவில் பேசியிருந்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. இது குறித்து பலரும் விமர்சனம் தெரிவித்திருந்தார்கள். இந்த நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் மாரி செல்வராஜ் ஜாதி குறித்து கூறியிருந்தது, தென் மாவட்டத்தில் அனைவர் மத்தியிலும் உளவியல் ரீதியாக ஜாதி இருக்கிறது. இதை ஒரே நாளில் மாற்ற முடியாது. எல்லோருமே ஒன்றாக சேர்ந்து நுணுக்கமாக செய்ய வேண்டியது.

சாதி குறித்து சொன்னது:

கலைத்துறை, அரசியல் உள்ளிட்ட எல்லாவற்றிலும் அழுத்தமான வேலையை முன்னெடுக்க வேண்டியது. ஒரே நாளில் மாற்ற முடியாது. அப்படி செய்தால் தான் அடுத்த தலைமுறையில் மாற்றம் வரும், புரிதல் உண்டாகும். தற்போது படங்கள் எல்லாம் ஒடிடியில் வெளியாகிறது குறித்து பல விமர்சனங்கள் வருகிறது. எல்லோர் வீட்டிலும் பூஜை அறை இருக்கிறது. இருந்தாலும் கோவிலுக்கு சென்று தான் சாமி கும்பிடுகிறார்கள். அதே போல் தான் ஒன்றிணைந்து திரையரங்கில் சென்று படம் பார்ப்பது என்றுமே மாறாது என்று கூறி இருக்கிறார்.

Advertisement