நான் நிற்பதை பார்த்துட்டு டாடா காட்டிட்டே போவானுங்க – மாரி செல்வராஜ் வாழ்வில் உண்மையில் நடந்துள்ள கர்ணன் சம்பவம்.

0
705
Mari
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். ஆரம்பத்தில் இவர் ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவுடன் தான் சினிமாவுக்குள் வந்தார். பின்னர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின் 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படத்தில் ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், 1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர், பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகிய படம் தான் ‘கர்ணன்’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. மேலும், கர்ணன் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் கர்ணன் படத்தின் அனுபவத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவரிடம் பஸ்சை உடைக்கிற காட்சியை எப்படி டிசைன் பண்ணீங்க? என்று கேட்டதற்கு மாரி செல்வராஜ் கூறியிருப்பது,

- Advertisement -

கர்ணன் படம் குறித்து மாரி செல்வராஜ் அளித்த பேட்டி:

நான் கல்லூரி படிக்கும் போது பஸ்சுக்காக மூன்று மணி நேரம் வரை எல்லாம் காத்து கொண்டு இருப்பேன். இப்போ கொஞ்சம் மாறி இருக்கு. இத்தனைக்கும் லா காலேஜ் மதியம் நடக்கும். ஆனால், காலையிலேயே 10 மணிக்கு எல்லாம் பஸ் ஸ்டாப்புக்கு போய் நிற்க ஆரம்பித்து விடுவோம். என் கூட படிக்கிற பசங்க எல்லோரும் நான் நிற்பதை பார்த்துட்டு டாடா காட்டிக் கொண்டே போவார்கள். ஒரு டவுன் பஸ்ஸுக்காக நின்று கொண்டே இருப்பேன். இப்படி நடக்கும் போது நமக்குள் ஒரு ஏக்கம் இருக்கும். இந்த டவுன் பஸ் விட்டுவிட்டால் வெயிலில் நின்று கொண்டே இருக்கணும். வேறொரு ஸ்டாப்புக்கு போகவும் தோணாது. ஏன்னா, அங்கே இருக்கிறவன் எல்லோருக்கும் அது என்னுடைய ஸ்டாப் இல்லன்னு தெரியும்.

கர்ணன் பட உருவான கதை:

அதனால் ஏதாவது கலாய்ச்சி பேசுவான். இப்படி ஒரு பஸ் கூட நிக்காத ஒரு ஊர் தான் என்னுடைய ஊர். இதுக்கு ஒரு பேரு என்று என்னை கலாய்ப்பார்கள். அப்போது நமக்கு வருத்தமாக இருக்கும். மேலும், ஒரு பஸ் நிறுத்தம் வேண்டும் என்றாலும் பத்து பேர் கூட இருக்கணும். அப்போது ஒரு சம்பவம் நடந்தது. அந்த சம்பவம் எனக்கு ஒரு ஆறுதலாக இருந்தது. என்னுடைய பஸ் ஸ்டாப்பில் நிற்காத ஒரு பஸ் நிறைய கல்லூரி மாணவர்களுக்கு பிடித்த அந்த பஸ் அன்னைக்கு அடிபட்டு கண்ணாடி உடைந்து நிக்குது. அதைப் பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருந்தது. எல்லோரும் ஏறி விளையாடிக் கொண்டிருந்தோம். நாய், ஆடு, மாடுன்னு எல்லாமே பஸ்ஸில் ஏறி விட்டது. ஊர் மக்கள் எல்லோரும் உட்கார்ந்து ரசித்துப் பார்த்தோம். இது எனக்கு உள்ளான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இதை வன்முறை என்று எல்லோரும் சொல்வார்கள்.

-விளம்பரம்-

பஸ்ஸில் நடந்த வன்முறை:

இந்த வன்முறை பின்னாடி இருக்கிற ஏக்கம் வெற்றியை பார்த்து தான் கர்ணன் கதை உருவானது. நான் படிக்கிறதுக்கு பொறுமை இருந்தது. அதனால் வெயிட் பண்ணி பஸ் பிடித்து படிக்கப் போனேன். நிறைய பேர் வீட்டில் பொண்ணுங்க படிக்காமல் போய் விட்டார்கள். ஏன்னா, அவர்களை கூப்பிடுவதற்கு ஆளுங்க இருக்கமாட்டார்கள். பஸ் ஸ்டாப்பில் ஏதாவது பிரச்சினை வந்து விடும் என்று ஒதுங்கிப் போய்விடுவார்கள். பஸ் ஸ்டாப்பில் ஒன்றரை மணி நேரம் நிற்க வேண்டும். அதனால் நிறைய பேர் படிப்பை விட்டு விடுவார்கள். என் ஊர் மற்றும் நகரத்தை தொடர்வதற்கு கிட்டத்தட்ட பல வருடங்கள் ஆகி விட்டது. காலேஜ் படிக்கிற வரைக்கும் திருநெல்வேலிக்கு அடிக்கடி வந்ததில்லை. 30 கிலோமீட்டர் கடக்க பல வருடம் தேவைப்பட்டது. பெரிய தூரமாக தெரியும்.

என் வாழ்க்கை வெற்றி தாமத்திற்கு காரணம்:

இதைவிடக் கொடுமை என்னவென்றால், திருநெல்வேலியில் இருந்து ஊருக்கு வருவதற்கு பஸ் ஓட்டுநர் ஒவ்வொருவராக எங்கள் ஊரில் நிற்குமா என்று கேட்போம். இத்தனைக்கும் எல்லாம் எங்க ஊரை கிராஸ் பண்ணி தான் போகும். திருச்செந்தூர் போற எல்லாம் எங்க ஊரை கிராஸ் ஆகாமல் போகாது. ஆனால், புளியங்குளம் நிற்குமா என்று கேட்டால் விரட்டிவிடுவார்கள். இந்த இடம்பெயர்தல் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. நான் ஏன் லேட்டா வெற்றி பெற்றேன் என்கிற காரணத்தை யோசிக்கிற போது இது தான் காரணமாக இருந்தது. லேட்டா திருமணம், சமூகத்தை புரிந்து கொண்டது, எல்லாத்துக்கும் இதுதான் காரணம். எல்லாமே ரொம்ப ரொம்ப தாமதமாக நடந்தது. இந்த வலியைத் தான் கர்ணன் படத்தில் காட்டினேன் என்று கூறினார்.

Advertisement