கமிட்மென்ட் முடிந்த பிறகு அவர் படம் தான் – மாரி செல்வராஜ் சொன்ன அப்டேட்

0
2282
- Advertisement -

சிவகார்த்திகேயன்- மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாக இருக்கும் படம் குறித்த புதிய அப்டேட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. எளிய பின்னணியிலிருந்து வந்து இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவர் ஹீரோயிசத்திற்கு மட்டுமில்லை அவரது நகைச்சுவை திறனுக்கும் என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது தமிழ் சினிமா உலகில் கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து இருந்த டாக்டர், டான் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக பிரின்ஸ் படம் தான் வெளிவந்தது. இந்த படத்தில் மரியா, பிரேம்ஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

மாவீரன் படம்:

இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இதனை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் ஜூலை மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கட்டிருந்தது.

படத்தின் ஆடியோ&ட்ரைலர் வெளியீட்டு விழா:

மேலும், சிவகார்த்திகேயன் பாடிய வண்ணாரப்பேட்டை பாடல் சோசியல் மீடியாவில் வெளியாகி பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினுடைய ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்று இருக்கிறது. இந்த விழாவில் மாவீரன் படக்குழுவினர், இயக்குனர் மாரி செல்வராஜ், மிஸ்கின், சூரி உட்பட பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார்கள். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாரி செல்வராஜ் கூறியது, நான் இயக்குனர் ஆனதை விட என்னுடைய நண்பர் விஷ்வா தயாரிப்பாளர் ஆனது தான் எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் கூறியது:

நானும் சிவகார்த்திகேயனும் அறிமுகமானதிலிருந்து நிறைய கிரிக்கெட் ஆடி இருக்கிறோம். நான் அவருடைய பந்தில் நிறைய முறை அவுட்டாகி இருக்கிறேன். பந்தை மெதுவாக போடுங்கள் என சொன்னால் கேட்கவே மாட்டார். என்னை அவுட் ஆகிவிட்டு சாரி சாரி என்று சொல்வார். சிவகார்த்திகேயனை எப்படி பார்க்க நினைத்தோனோ அப்படியான படமாக தான் இந்த மாவீரன் படம் இருக்கிறது. அதேபோல் சிவகார்த்திகேயன் என்னுடைய படத்தை பற்றி விசாரித்து வாழ்த்துக்களை சொல்லிவிடுவார்.

சிவகார்த்திகேயன்-மாரி செல்வராஜ் கூட்டணி:

இந்த படத்தில் சமூகத்திற்கு தேவையான ஒன்று இருக்கு. தயாரிப்பாளர் அருண் விஷ்வா மற்றும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நான் எப்போது வேண்டுமானாலும் படம் இயக்குவேன். தற்போது எங்களுடைய கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடிந்த பிறகு தான் அது பற்றி பேசி முடிவெடுப்போம். மாவீரனுக்கு
மாமன்னனின் வாழ்த்துக்கள் என்று கூறி இருக்கிறார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாமன்னன் படம் மிக பெரிய அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisement