‘தேவர் மகன்’ படம் சரியா தப்பா? கமல் முன்பே மேடையில் ஆக்ரோஷமான மாரி செல்வராஜ்

0
6833
Mariselvaraj
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். ஆரம்பத்தில் இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’.

-விளம்பரம்-

இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை அடுத்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. தற்போது மாமன்னன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

- Advertisement -

மாமன்னன் படம்:

மேலும், இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாமன்னன் படத்தின் பட குழுவினர் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் கூறியிருந்தது, எல்லோருக்கும் வணக்கம்! கமல் சாரை ரொம்ப நேரமாக காத்திருக்க வைத்து விட்டோம். இதற்காக முதலில் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பரியேறும் பெருமாள், கர்ணன் இந்த இரண்டு படங்கள் தொடர்பாக நடந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் நான் ரொம்ப சீரியஸாக இருந்தேன்.

விழாவில் மாரி செல்வராஜ் கூறியது:

ஆனால், நான் இப்போது சீரியஸாக இல்லை. எல்லாவற்றையும் மறந்து அமர்ந்திருக்கிறேன். எப்போதுமே எமோஷனலாக எதையாவது யோசித்துக் கொண்டே இருப்பேன். இதனால் எனக்கு பிரஷர் அதிகமாக ஏறிவிடும். ஆனால், இன்று அப்படி எனக்கு எந்த ஒரு எண்ணமும் இல்லை. அதற்கு காரணம் உதயநிதி சார் தான். அவர் என்னை கலகலப்பாய் வைத்து கொண்டே இருந்தார். அதனால் நான் ரொம்ப சந்தோஷமாக இருந்தேன். இந்த நிகழ்ச்சி என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்ச்சியாக மாறிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் சாரும் தான்.

-விளம்பரம்-

படம் குறித்து சொன்னது:

நான் முதலில் மாமன்னன் கதையை யோசிக்கும் போது இது படமாக மாறுமா? மாறாதா? என்ற பல சந்தேகங்கள் இருந்தது. ஆனால், இன்று படமாக மாறி தற்போது முக்கிய கட்டத்திற்கு வந்திருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளர், எடிட்டர் செல்வா, ஆர்ட் டைரக்டர் குமார், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் டான்ஸ் மாஸ்டர் சாண்டி போன்ற எல்லோருக்குமே இந்த நேரத்தில் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். அதோடு மாரி செல்வராஜ் படத்தில் ஒரு நிஜம் இருக்கிறது. அவர் அதைத்தான் படம் முழுக்க கடத்துவார் என்ற உண்மையாக அவர்கள் நம்புகிறார்கள்.

உதயநிதி குறித்து சொன்னது:

அண்ணன் யுகபாரதி எனக்கு இந்த படத்திற்கு ஆறு பாடல்களை எழுதி கொடுத்திருக்கிறார். ரெட் ஜெயிண்ட் எனக்கு செட் ஆகுமா? என்று கேட்டார்கள். பயந்து கொண்டே தான் இருந்தேன். ஒரு சிலர் உனக்கும் அவருக்கும் செட்டாக வாய்ப்பே இல்லை என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், இந்த படத்தை முடித்துவிட்டு வாழை என்கிற ஒரு படத்திற்கு நான் செல்வதற்கான ஸ்பேஸ் எனக்கு கிடைத்தது என்றால் அது முழு காரணம் உதயநிதி சார் தான். அவர் நான் கேட்டதை எல்லாம் தொடர்ந்து அனுப்பி கொண்டிருந்தார்கள். படம் சீக்கிரம் முடிந்தது போல் இருக்கிறது. நான் ஒரு பெரிய இயக்குனர் என்று என்னை நம்ப செய்யவும் வைத்தது ரெட் ஜெயிண்ட், உதயநிதி சாரும் தான். படம் உங்களுக்குள் சென்று கேள்விகளை கேட்கும். அந்த கேள்விகள் என்னுடைய பயணத்தை விரிவடைய வைக்கும். நான் இன்னும் என் படைப்புகளை நோக்கி மிகவும் ஆர்வமாக ஆக்ரோஷமாக செல்வேன் என்று சுவாரசியமாக பேசியிருந்தார்.

Advertisement