பரியன் படிச்சான், கர்ணன் மட்டும் ஏன் சண்ட போட்டான் – ரசிகர் கேள்விக்கு மாரி செல்வராஜ் சொன்ன சூப்பர் பதில்.

0
113
- Advertisement -

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படம் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு மாரி செல்வராஜ் அளித்திருக்கும் பதில் வைரலாகி இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் தங்களுடைய நீலம் பண்பாட்டு மையம் சார்பாக பிகே ரோஸி திரைப்பட விழாவை வருடம் வருடம் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது நான்காம் ஆண்டு பிகே ரோஸி திரைப்பட விழா நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த விழா கடந்த 8ஆம் தேதி தொடங்கி சமீபத்தில் நிறைவடைந்து இருக்கிறது. மேலும், நேற்று இந்த விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படம் வெளியிடப்பட்டது. இதில் மாமன்னன் படக்குழுவினர் கலந்து கொண்டு ரசிகர்களுடைய கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்கள். அப்போது மாமன்னன் படம் குறித்து மாரி செல்வராஜ், மாமன்னன் படம் ஒரு சாதாரண சம்பவம். என்னுடைய அப்பா ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார். நான் சாரில் உட்கார்ந்து இருந்தேன். ஆனால், அவர் உட்காரவில்லை.

- Advertisement -

விழாவில் மாரி செல்வராஜ்:

அன்று என்னுடைய அப்பா உட்பட யாருமே அதைப்பற்றி கவலைப்படவில்லை. ஆனால், எனக்கு அவர் ஏன் உட்காரவில்லை? என்று எண்ணம் வந்தது. இது குறித்து நான் கேட்டபோது, நாங்கள் உட்கார மாட்டோம் என்று சொன்னார். இந்த மாதிரி நிறைய சம்பவங்களை என்னுடைய சிறுவயதில் பார்த்திருக்கிறேன். ஆனால், இன்றைக்கு பார்க்கும்போது அது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் அது ஒரு கதையாக மாறுகிறது. பரியேறும் பெருமாள் படம் பண்ணிட்டு இருக்கும்போது கூட என்னுடைய அப்பா அப்படிதான் நின்று இருந்தார்.

சினிமா குறித்து சொன்னது:

என்னுடைய படைப்பு குறித்து பத்து வருடம் கழித்து கேள்வி கேட்கப்படலாம். எனக்கு இருக்கும் வலி அதை வெளியேற்ற வேண்டும் அவ்வளவுதான். நமக்கு முன்னாடி ஒடுக்கப்பட்டவருடைய வாழ்க்கையை தான் படம் எடுத்து காண்பிக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு 10 பேர் முக்கிய ஆளுமைகளாக பேசிக்கொண்டு வருகிறோம். ஆனால், தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியே சொல்ல முடியாமல் நசுங்கி இறந்து போனவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையும் கதை தான். 10 பேரோட கதையை சொல்வது மட்டும் என்னுடைய வேலை கிடையாது.

-விளம்பரம்-

நசுங்கி பிசுங்கி காணாமல் போனவர்களுடைய கதையை தோண்டி எடுத்து அவர்கள் யாரால் நசுக்கப்பட்டார்கள் என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. ஏன் நசுக்கப்பட்டு, பிதுக்கப்பட்டனும் என்ற கேள்வி சொல்லிக் கொண்டே இருக்கீங்க என்று கேட்பார்கள்? வேறு வழி இல்லை, என்னுடைய கதையை சொல்லும்போது அப்படித்தான் சொல்ல முடியும். நான் இன்னொருவருடைய கதையை கடன் வாங்கி சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.

கர்ணன் குறித்து மாரி செல்வராஜ் :

இப்படி ஒரு நிலையில் இந்த விழாவில் ரசிகர் ஒருவர் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் பரியனுக்கு படிக்கணும், எந்த அளவிற்கு சண்டை போட்டால் போதும் என்று இருப்பவர் போல நீங்கள் உருவாக்கி இருந்தீர்கள். மேலும், மாமன்னன் படத்தில் அரசியல் ரீதியாக ஒடுக்கப்படுவதால் அரசியல் ரீதியாக ஒருவர் போராடுகிறார். ஆனால், கர்ணன் மட்டும் ஏன் சண்டை போடுறான்? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த மாரி செல்வராஜ்’ ஆர்டரை மாத்தி பாருங்க. கர்ணன் முதல் படமாக பாருங்கள், பரியேறும் பெருமாளை அடுத்த படமாக பாருங்கள் பின்னர் மாமன்னன் பாருங்கள். ஊரில் பஸ் நீக்காத ஒரு ஊரில் பிறந்த ஒருவன் சட்டக் கல்லூரிக்கு படிக்கப் போகிறான். அதனால் அரசியல் கற்றுக்கொள்கிறான் அதனால் மாமன்னனாக மாறுகிறான்’ என்று கூறியுள்ளார்.

Advertisement