எதிர்காலத்தில் படமே நடிக்க முடியாது – விஷாலுக்கு உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை.

0
1768
- Advertisement -

இனி உங்களால் படமே நடிக்க முடியாது என்று விஷாலுக்கு உயர்நீதிமன்றம் போட்டிருக்கும் எச்சரிக்கை தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக விஷால் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் ஜி.கே ரெட்டியின் இரண்டாவது மகன் ஆவார். இவர் சினிமாவில் நடிகர் ஆவதற்கு முன்பே நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்து இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் இவர் ஹீரோவாக நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லத்தி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இப்படி இவர் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வந்தாலும் விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாயை விஷால் கடனாக பெற்றிருந்தார்.

- Advertisement -

விஷால் மீது வழக்கு:

மேலும், இந்த தொகையை லைகா நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டு செலுத்தி இருந்தது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷால் உடன் ஒரு ஒப்பந்தம் போட்டிருந்து. அந்த ஒப்பந்தத்தில் இந்த கடன் தொகையை முழுமையாக நான் திருப்பி செலுத்தும் வரை என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும் அனைத்து படங்களில் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்று விஷால் உத்தரவாதம் கொடுத்திருந்தார். ஆனால், விஷால் சொன்னபடி கடன் தொகையை திருப்பி தரவில்லை.

விஷால் செய்த மோசடி:

அது மட்டும் இல்லாமல் வீரமே வாகை சூடும் படத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியிடும் பணிகளில் ஈடுபட்டிருந்தார். இதனால் வீரமே வாகை சூடும் படத்தின் வெளியீட்டு உரிமை, சேட்டிலைட், ஓடிடி ஆகியவற்றின் உரிமைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பின் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 21 கோடியே 29 லட்சத்தை உயர்நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்து. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

-விளம்பரம்-

நீதிபதி உத்தரவு:

மேலும், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து தொகையை செலுத்தாவிட்டால் விஷால் ஃபிலிம் ஃபேக்டரின் நிறுவனம் தயாரிக்கும் படங்களை திரையரங்கம் அல்லது ஓடிடி தளங்களில் வெளியிடக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்தார்கள். இதனை அடுத்து விசாரணையில் விஷால் இன்னும் லைகா நிறுவனத்திற்கு 15 கோடி செலுத்தவில்லை என்றும், தந்துவிட்டதாக நீதிமன்றத்திற்கு தவறான தகவலை விஷால் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இதனால் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் மார்க் ஆண்டனி படம் வரும் 15ஆம் தேதி வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் சார்பில் கோரிக்கை வைத்திருந்தார்கள்.

விஷாலுக்கு போட்ட எச்சரிக்கை:

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. விஷால் நேரில் ஆஜராகி இருக்கிறார். அப்போது விசாரித்த நீதிபதி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரையிலான விஷாலின் நான்கு வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அது மட்டும் இல்லாமல் அவருடைய குடும்ப உறவினர்களின் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் உள்ளிட்ட விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். விஷாலின் வங்கி கணக்கில் ஏதாவது முரண் இருந்தால் எதிர்காலத்தில் விஷால் படம் நடிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மார்க் ஆண்டனி படத்துக்கு விதிக்கப்பட்ட தடையும் நீக்கி இந்த வழக்கு விசாரணையை வேறொரு தேதிக்கு ஒத்து வைப்பதாக நீதிபதி எச்சரித்து இருக்கிறார்.

Advertisement