இணையத்தில் கசிந்த ரஜினி 166 பர்ஸ்ட் லுக்.! வில்லன் யாரு தெரியுமா.!

0
1118
Rajini-166
- Advertisement -

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘சர்கார்’ திரைப்படத்திற்கு பின்னர், நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து ஒரு படத்தை எடுக்கவுள்ளார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் செய்திகள் பல நாட்களாக அடிபட்டு வரும் நிலையில் இன்னும் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற உள்ளதாக ஏற்கனவே சில தகவல்கள் வெளியானது. மேலும், முதற்கட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி துவங்க உள்ளது. சமீபத்தில் வந்த தகவலின்படி இன்று(ஏப்ரல் 3) இந்த படப்பிடிப்பிற்கான போட்டோ ஷுட்கள் நடைபெற்றதாகவும் அதில் ரஜினி கலந்து கொண்டதாகவும் நம்பகமான தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

எனவே, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த் இந்த படத்திற்காக நடத்திய போட்டோ சூட்டிலிருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனால் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும், இதில் கூடுதல் தகவல் என்னவெனில் இந்த படத்தில் ரஜினியின் வில்லனாக தேசிய சூர்யா நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் ரஜினி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தில் ஒரு ஓரத்தில் எச்சில் சூர்யாவும் நிற்பது போல இருக்கின்றது. எனவே ,இந்த படத்தில் பேசிய சூர்யா நடிப்பது உறுதியாகி உள்ளது. நடிகர் சூர்யா ஏற்கனவே முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement