5 வயதில் இருந்து நடிப்பு, 50கும் மேற்பட்ட சீரியல்கள் – கடைசியில் நடிப்பை விட்ட காரணம் சொன்ன மர்மதேசம் குட்டி ராசு.

0
784
marmadesam
- Advertisement -

90ஸ் கிட்ஸ்கள் மறக்க முடியாத சீரியல்களில் மர்மதேசம், விடாதுகருப்பு, ஜீ பூம்பா சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் குட்டி ராசு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிறுவன் பெயர் லோகேஷ் ராஜேந்திரன். இப்படி 90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான தொடர்களில் நடித்து அதற்குப் பிறகு சின்னத்திரை சீரியல் இருந்து பலர் விலகி இருக்கிறார்கள். அந்த வரிசையில் லோகேஷும் ஒருவர். ஆனால், இவர் என்ன ஆனார்? என்ற தகவலும் தெரியவில்லை. இந்நிலையில் விடாதுகருப்பு சீரியலில் நடித்த நடிகர் லோகேஷ் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அது அவர் சீரியல் அனுபவத்தை குறித்து கூறியிருப்பது, நான் இந்த சீரியலில் நடித்த போது எனக்கு ஐந்து வயது. என் தாத்தா தான் எம் ஆர் ராதா. அப்பா மேடை நாடகங்களில் பணியாற்றிக்கொண்டு இருந்தார். அவருடைய நண்பர் மூலமாக தான் இந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உடனடியாக எங்க அப்பா ஆடிசனுக்கு கூட்டிட்டு போய் இருந்தால் நான் ராசு என்ற ரோலில் நடித்தேன். இந்த சீரியலின் இயக்குனர் நாகா சார். அவருடன் பயணித்தது மிக அருமையான தருணம். இன்னும் இந்த சீரியல் 90ஸ் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு தான் வருகிறது.

- Advertisement -

யாராலும் மறக்கமுடியாத சீரியல் :

கிட்டத்தட்ட 25 வருடம் ஆகியும் இன்னும் எங்களை மக்கள் ஞாபகம் வைத்திருப்பது நினைத்து சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது. இப்போது இந்த சீரியலை பார்த்தால் கூட எனக்கு ஒரு மாதிரியாக பயமாக இருக்கிறது. அந்த அளவிற்கு அற்புதமான சீரியல். யாராலும் மறக்கமுடியாத சீரியல் என்று சொல்லலாம். மர்மதேசம் மூலம் தான் நான் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினேன். அதன் மூலம் எனக்கு பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு வந்திருந்தது. நான் எப்பயாவது தான் பள்ளிக்கூடத்திற்கு போவேன்.

50க்கும் மேற்பட்ட தொடர்கள் :

பேய் சீரியலில் நடித்ததால் ஸ்கூலில் பசங்க எல்லோரும் என்னை பார்த்து பயப்படுவார்கள். எல்லோரும் என்னை விடாது கருப்பு ராஜேந்திரனாகத்தான் பார்த்தார்கள். பின் வளர ஆரம்பித்து விட்டேன். இந்த சீரியலில் நடித்த பல நடிகர்கள் தற்போது சினிமாவில் பிரபலமானவர்களாக திகழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இந்த சீரியல் மூலம் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்து இருக்கிறது. அதற்கு பிறகு கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்திருக்கிறேன். விடாது கருப்பு மாதிரி என்னுடைய கேரியரில் முக்கியமான தொடர் என்றால் ஜீபூம்பா.

-விளம்பரம்-

ஜீபூம்பா தொடர் :

ஒரு குறிப்பிட்ட வயசுல நடிக்கிறதை நிறுத்திக்கோங்கன்னு நாகா சார் சொன்னார். நானும் நடிக்கிறதை விட்டுட்டு டான்ஸ் கத்துக்கிட்டேன். ஸ்கூல் முடிச்சிட்டு என்ன பண்றதுன்னு தெரியல. மறுபடி நாகா சார்கிட்ட போய் நின்னேன். என்கிட்ட அசிஸ்டென்ட் டைரக்டராக சேர்ந்துக்கோங்கன்னு சொன்னார். அவர் சொன்னதால் ஓகே சொல்லிவிட்டேன். அப்போ அவர் பொன்னியின் செல்வன் என்று நாவலை ஒரு சீரியலாக எடுத்திருந்தார். அதில் நான் ஒர்க் பண்ணினேன். அவருடைய மேக்கிங், டீசிங் வேற மாதிரி இருக்கும். பல விஷயங்கள் அவரிடம் கற்றுக் கொண்டேன். ஆனால், அந்த சீரியல் திடீரென்று டிராப் ஆகிவிட்டது. அதற்கு பிறகு தான் எனக்கு இயக்கத்தில் ஆர்வம் வந்தது. ஆனந்தபுரத்து வீடு, அம்புலி உட்பட பல படங்களில் ஒர்க் பண்ணி இருக்கேன்.

தற்போது என்ன செய்கிறார் :

இயக்கத்தில் ஆர்வம் இருக்கும் என்றால் முதலில் நாம் எடிட்டிங் கத்துக்கணும் என்பதை நாகா சார் எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். எடிட்டிங், சவுண்ட், டைரக்ஷன் எல்லாமே எனக்கு தெரியும். ஆனால், என்னுடைய அப்பாவுக்கு நான் நடிக்கவில்லை என்ற வருத்தம் தான் அதிகமாக இருந்தது. ஆனால், அதைத் தாண்டி பல விஷயங்களை நான் கற்றுக் கொண்டேன். சீரியல் ப்ரொடக்ஷன் சார்ந்த ஒர்க் பண்ணினேன். இப்ப மீடியாவில் பத்தாண்டுகளுக்கும் மேலாக ட்ராவல் பண்ணிட்டு இருக்கிறேன். மீடியாவில் பொறுத்தவரை நீண்ட நாள் இருப்பதும் இல்லாமல் போவதும் நம் கையில் தான் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement