நான் வளந்துட்டே போறேன்னுதா சீக்கிரமா Climax வச்சாங்க – 90ஸ் கிட்ஸ் பேவரைட் சீரியல் மர்மதேசத்தில் நடித்த குட்டி ராசுவின் பேட்டி இதோ.

0
728
marmadesam
- Advertisement -

90ஸ் கிட்ஸ்கள் மறக்க முடியாத சீரியல்களில் மர்மதேசம் விடாதுகருப்பு சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் குட்டி ராசு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிறுவன் பெயர் லோகேஷ் ராஜேந்திரன். இந்நிலையில் விடாதுகருப்பு சீரியலில் நடித்த நடிகர் நாகேஷ் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அது அவர் விடாதுகருப்பு சீரியல் அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது நான் இந்த சீரியலில் நடித்த போது எனக்கு ஐந்து வயது என்னுடைய அப்பா நாடக மேடை நாடகங்களில் பணியாற்றிக்கொண்டு இருந்தார் அவருடைய நண்பர் மூலமாக தான் இந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

உடனடியாக எங்க அப்பா என்னுடைய அப்பா என்னை ஆடி சொன்னது கூட்டிட்டு போய் இருந்தால் அதற்கு பின் செலக்ட் ஆகி நான் ராசு ராசு என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன்.இந்த சீரியலின் இயக்குனர் நாகா சார் அவருடன் பயணித்தது மிக அருமையான தருணம். இன்னும் இந்த சீரியல் 90ஸ் ரசிகர்கள் மட்டுமில்லாமல் இன்னும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் வருகிறது. இப்போது இந்த சீரியலை பார்த்தால் கூட எனக்கு ஒரு மாதிரியாக பயமாக இருக்கிறது. அந்த அளவிற்கு அற்புதமான சீரியல், யாராலும் மறக்கமுடியாத சீரியல் என்று சொல்லலாம்.

- Advertisement -

மர்மதேசம் வாய்ப்பு :

மர்மதேசம் மூலம் தான் நான் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினேன் அதன் மூலம் எனக்கு பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு வந்திருந்தது. மாதத்தில் இருபது நாட்கள் சீரியல்களில் நடித்துக் கொண்டு இருப்பேன், மீதி நாட்கள் தான் பள்ளிக்குச் செல்வேன். அது மட்டுமில்லாம என் பள்ளியிலும் எனக்கு நிறைய சப்போர்ட் பண்ணினார்கள். சூட்டிங் பொள்ளாச்சியில் நடந்ததால் அதிகம் அங்கு தான் இருப்போம், என்னுடன் நடித்த மகேந்திரன், ஜெனிஃபர் என பல பேர் தற்போதும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும் மகேந்திரன், ஜெனிஃபர் என்னுடன் இப்போது அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் வாங்கிய அரை :

இந்த சீரியலில் நடித்த பல நடிகர்கள் தற்போது சினிமாவில் பிரபலமானவர்களாக திகழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.இந்த சீரியல் மூலம் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்து இருக்கிறது. ஒரு முறை சீரியலில் என்னைய அடிக்கும் மாதிரி ஒரு காட்சி எடுக்கப்பட்டது. உண்மையால் என்னை பளார் என்று அடித்து விட்டார்கள். அடித்தது உடனே என்னால் வலி தாங்கமுடியவில்லை. இருந்தாலும் கத்த கூடாது, அழக் கூடாது என்பதால் அமைதியாக சொல்லும் வரை நடித்துக் கொண்டிருந்தேன். கட் சொல்லி முடித்தவுடன் பயங்கரமாக கத்தினாள் அப்போதே இயக்குனர் முதல் எல்லோருமே வந்து என்ன ஆகிவிட்டது என்று என் கன்னத்தை பார்த்தார்கள்.

-விளம்பரம்-

சீக்கிரம் கிளைமாக்ஸ் வைக்க காரணம் :

அந்த காட்சி எடுக்கும் பரபரப்பில் அவரை அறியாமல் என்னை அடித்துவிட்டார். ஐந்து விரலும் என் கண்ணத்தில் பதிந்திருந்தது அது என்னால் மறக்கவே முடியாது. இப்படி நிறைய அனுபவங்கள் அந்த சீரியலின் மூலம் கிடைத்து இருக்கிறது. அதேபோல் இந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சி எடுக்கும்போது நான் வளர்ந்துகொண்டே இருந்தேன் அதனால் சீக்கிரமாகவே கிளைமாக்ஸ் காட்சியை இயக்குனர் நாகா சார் எடுத்திருந்தார். மீண்டும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி இருக்கிறது என்பதை நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது. இப்போது இந்த சீரியலை பார்க்க எனக்கு பயங்கர எக்சைட்மென்ட் ஆகவும் இருக்கிறது. அவரிடம் ஆர்ட்டிஸ்டாக நடித்து இப்போது அவரிடம் உதவி இயக்குனராக இருக்கிறேன்.

நாகாவின் உதவி இயக்குனர் :

நான் பள்ளி முடிந்தவுடன் நாகா சார் என்ன பண்ண போகிறாய் என்று கேட்டார் நான் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று சொன்னவுடன் உதவி இயக்குனராக வருகிறாயா என்று கேட்டார் அப்படியே அவரிடம் உதவி இயக்குனராக சேர்ந்தேன். பல விஷயங்களை அவரிடம் கற்றிருக்கிறேன். எப்படி எடுக்கணும் நடிகர்களை எப்படி கையாளுவது ஒரு சீரியலை எப்படி எடுக்கணும் என்று பல நுணுக்கங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அதன் மூலம்தான் எனக்கு இயக்குனராக வேண்டும் என்ற எண்ணமும் வந்தது. அப்படியே சினிமாவிற்குள் நுழைந்துவிட்டேன் என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Advertisement