‘ பணக் கஷ்டம், விவாகரத்து நோட்டீஸ்’ லோகேஷின் தற்கொலைக்கு காரணம் – கண்ணீர் மல்க தந்தை மற்றும் நண்பர்கள் அளித்த பேட்டி

0
177
marmadesam
- Advertisement -

மர்ம தேசம் நடிகர் லோகேஷின் தற்கொலை குறித்து அவருடைய நண்பர்கள், தந்தை அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 90ஸ் கிட்ஸ்கள் மறக்க முடியாத சீரியல்களில் மர்மதேசம் சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் குட்டி ராசு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிறுவன் தான் லோகேஷ் ராஜேந்திரன். இவருடைய தாத்தா மிக பிரபலமான நடிகர் எம் ஆர் ராதா. இவருடைய அப்பா நாடக மேடையில் பணியாற்றியவர். அதன் மூலமாகத்தான் தன்னுடைய மகனுக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வாங்கி கொடுத்திருந்தார்.

-விளம்பரம்-

மர்மதேசம், ஜீபூம்பா போன்ற 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் லோகேஷ் நடித்து இருந்தார். பின் இவர் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு போராடினார். ஆனால், அந்த கனவை எட்டி பிடிக்கும் முன்பே லோகேஷ் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் லோகேஷின் தற்கொலை குறித்து அவருடைய நண்பர்கள் கூறியிருந்தது, சமீப காலமாகவே லோகேஷுக்கு உடம்பு சரியில்லை. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தார். பண உதவி கேட்டு தன்னுடன் நடித்த பல நடிகர்களுக்கு போன் பண்ணி பேசி இருந்தார். அவர்களும் அவர்களால் முடிந்த உதவிகளை செய்திருந்தார்கள்.

- Advertisement -

லோகேஷ் தற்கொலைக்கு காரணம்:

அதுமட்டுமில்லாமல் வேலை இல்லாததனால் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க முடியவில்லை என்று பலரிடமும் லோகேஷ் புலம்பி இருந்தார். இதனால் அவனுக்கு அசிஸ்டன்ட் டைரக்டர் வேலையெல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். மேலும், 25 வருடம் மர்ம மதேசம் கொண்டாட்டத்தில் கூட இயல்பாக லோகேஷ் பேசியிருந்தார். எப்பவும் போல நார்மலாக தான் பேசி சிரிச்சிட்டு இருந்தார். ஆனால், அவர் மனதளவில் உடைந்து போய் இருந்தார் என்ற விஷயமே எங்கள் யாருக்கும் தெரியவில்லை. அதோடு அவனுடன் அப்பா, அம்மா, மனைவி, குழந்தை என்று யாருமே இல்லை என்ற தகவலும் கேள்விபட்டோம்.

லோகேஷ் நண்பர்கள் அளித்த பேட்டி:

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் மருந்து குடித்துவிட்டு சுயநினைவு இல்லாமல் இருந்திருக்கான். அவனை போலீஸ் தான் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் இருக்கிறார்கள். ஆனால், அவர் இறந்து விட்டார். ரொம்ப சின்ன வயது. இந்த சின்ன வயதில் இப்படி ஒரு முடிவை லோகேஷ் எடுப்பார் என்று யாருமே நினைத்து கூட பார்க்கவில்லை என்று கூறி இருந்தார்கள். இதனை அடுத்து லோகேஷ் மரணம் குறித்து அவர்களுடைய அப்பா கூறி இருந்தது, குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவனுடைய மனைவி நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதனால் லோகேஷ் மன உளைச்சலில் இருந்தான்.

-விளம்பரம்-

லோகேஷ் தந்தை அளித்த பேட்டி:

2011 ஆம் ஆண்டு அனிஷா என்ற பெண்ணை காதலித்து லோகேஷ் திருமணம் செய்து கொண்டான். மனைவியுடன் மாடம்பாக்கத்தில் தான் வசித்து வந்தான். நான் வில்லிவாக்கத்தில் வசித்து வருகிறேன். திருமணத்திற்கு பின் லோகேஷ் என்னுடனான தொடர்பை துண்டித்து கொண்டான். இதுவரை அவன் என்னை இரண்டு முறை மட்டும் தான் சந்தித்து இருக்கிறான். கடைசியாக கடந்த சனிக்கிழமை என்னை சந்திக்க வந்த லோகேஷ் பணம் வேண்டும் என கேட்டு பெற்று சென்றான். அதன் பிறகு எங்கு சென்றான் என்பது பற்றி எனக்கு தெரியாது? மனைவியுடன் கருத்து வேறுபாடு குடும்ப பிரச்சனை எதுவுமே எனக்கு தெரியாது? விவாகரத்து குறித்த நோட்டீஸ் வந்த பிறகு தான் இருவரும் கடந்த ஆறு மாதங்களாக பிரிந்து வாழ்வது பற்றி எனக்கு தெரிந்தது.

லோகேஷ் மனைவி செய்தது:

கடந்த திங்கட்கிழமை போலீஸ் தகவல் தெரிவித்த பிறகு லோகேஷ் தற்கொலை செய்து கொண்டடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் தெரிய வந்தது. என்னுடைய சொந்த முயற்சியில் என்னுடைய மகனை நடிப்பு துறையில் முன்னேற நினைத்தேன். ஆனால், அவன் இப்படி செய்து கொள்வான் என்று நான் எதிர்பார்க்கவில்லை. என் மகனின் உடலை நான் என் வீட்டிற்கு எடுத்து செல்ல இருக்கிறேன் என்று கண்ணீர் மல்க கூறி இருந்தார். லோகேஷன் மனைவி அனுஷா பார்வையாளர் போல் வந்து மருத்துவமனைக்கு சென்று விட்டு உடல் எனக்கு வேண்டாம் என்று தடையில்லா சான்று கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.

Advertisement