சினிமாவில் வாய்ப்பு தருவதாக இளம் பெண்ணுடன் எஸ்கேப் ஆன புதுமுக நடிகர்.!

0
888
- Advertisement -

பயபுள்ள என்ற படத்தில் நடித்து வந்த சிவா என்ற புதுமக நடிகர் சிவா என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வாடகைக்கு குடி இருந்த வீட்டின் அருகில் வசித்து வந்த பட்டதாரி பெண் ஒருவரை மயக்கி அழைத்துக்கொண்டு ஊரை விட்டு ஓட்டம் பிடித்துள்ளார்.

-விளம்பரம்-

செஞ்சியை பூர்விகமாக கொண்ட சிவா சினிமா மீதுள்ள மோகத்தால் சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளார். சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த சிவாவுக்கு பின்னர் ‘பயபுள்ள’ என்ற படத்தில் கதாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

- Advertisement -

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்த சிவா தனது வீட்டின் அருகில் குடியிருந்த பட்டதாரி பெண்ணிற்கு பல பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை எல்லாம் காட்டி மயக்கி காதல் வலையில் விழவைத்துள்ளார்.

பட்டதாரி பெண்ணை வர்ணித்து மயக்கி காதல் வலையில் வீழ்த்த சிவா, திருமணம் செய்துகொள்வதாக கூறி புத்தாண்டு நாளை முன்னிட்டு காதலியுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதையடுத்து பெண்ணின் குடும்பத்தார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
தனது மனைவியை பிரிந்து வாழ்வது போன்று நடித்து அப்பெண்ணை ஏமாற்றியுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

-விளம்பரம்-

Advertisement