மசினகுடியில் காட்டு யானைக்கு தீ வைத்து கொடுமைப்படுத்திய விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்ட்டுள்ளனர். சமீபத்தில் காட்டு யானைக்கு சிலர் தீ வைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக வெளியானது. மசினகுடி மாவனல்லா பகுதியில் இரவு தனியார் விடுதி அருகே காட்டு யானை வந்தபோது சிலர் பழைய டயர்களுக்கு தீ வைத்து காட்டு யானை மீது வீசினர். இதில் வலி தாங்க முடியாமல் காட்டு யானை பயங்கரமாக பிளிறியவாறு அங்கிருந்து ஓடிச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. மேலும், இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்து அவர்களுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று பல தரப்பினரும் குரல் எழுப்பினர். மேலும்,  வனத்துறையின் தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இப்படி ஒரு நிலையில் காட்டு யானைக்கு தீ வைத்து கொடுமைப்படுத்திய விவாகரத்தில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அதில் மசினகுடி தர்கா ரோட்டை சேர்ந்த பிரசாத் (வயது 36), மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியை சேர்ந்த ரேமண்ட் டீன் (28) , ரிக்கி ராயன் (31) ஆகிய 3 பேர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisement

ஆனால், தற்போது பிரசாந்த் மற்றும் ரேமண்ட் டீன் ஆகிய இரண்டு பேரை மட்டும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இப்படி ஒரு நிலையில் இந்த கோரா சம்பத்தை செய்த இந்த இருவரும் கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு இருந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் குன்னூர் கிளைச் சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், இவர்கள் இருவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் கேரளாவில் பெண் யானை ஒன்று பசியை போக்கிக் கொள்ள மலப்புரம் பகுதிக்கு வந்தது. அப்போது அங்கிருந்த இரக்கமற்ற மனிதர் ஒருவர் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை கொடுத்து உள்ளார். அதை சாப்பிட்ட யானையின் வாய் புண்ணாகியது. அதன் பிறகு உண்ண முடியாமல் பசியால் துடிதுடித்துள்ளது. ஆற்று நீரில் இறங்கிய அந்த பெண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. பின் அந்த யானையை பிரேத பரிசோதனை செய்தார்கள். அப்போது அந்த யானையின் வயிற்றில் ஒரு குட்டி இருந்தது தெரிய வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement
Advertisement