அர்ஜுன் தாஸ் என்னுடன் இந்த வேலை பார்த்தவர் தான் – சிவரஞ்சனி வெளியிட்ட அறிய புகைப்படம்.

0
40665
arjundas

இவங்க தலைய எடுக்கறவங்களுக்கு லைப் டைம் செட்டில்மண்ட் என்ற வசனத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் அர்ஜுன் தாஸ். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த சில மாதத்திற்கு முன்னர் வெளியாகி இருந்த கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த அர்ஜுன் தாஸ் தனது கம்பீரமான குரல் மூலமும் அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்திருந்தார்.

இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவு பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மேலும், இவர் விக்ரம் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் வில்லனுக்கு டப்பிங் கொடுத்து இருந்தார். அப்போதே இவரது குரலுக்கு பலர் ரசிகர்களானார்கள்.

- Advertisement -

ஆனால், இவர் சினிமாவில் நடிக்க வரும் முன்பு என்ன வேலை செய்தார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்க வரும் முன்பு ரேடியோ ஒன் என்ற fm-ல் rjவாக பணியாற்றி இருக்கிறார். இதனை பிரபல தொகுப்பாளினியாக ஸ்ரீரஞ்சனி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பிளானியாக பணியாற்றியாவர் ஸ்ரீரஞ்சனி.

rjsarah Instagram posts - Gramho.com

இவர் பிரபல சீரியல் நடிகரான அமீத் பார்கவ்வின் மனைவி என்பது பலரும் அறிந்த ஒன்று. இவரும் அர்ஜுன் தாஸும் ரேடியோ ஒன் Fm-ல் ஒன்றாக வேலை பார்த்தவர்கள் தான். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்திருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் அர்ஜுன் தாஸ் பற்றி கூறுங்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஸ்ரீரஞ்சனி, அர்ஜுன் தாஸுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement