‘அநியாயத்துக்கு ஒரு அட்வைஸ்கே சோறு போட்டு வளத்த பவானிய காட்டி கொடுத்துட்டியே ரசிகரின் கமன்ட்டிற்கு தீனா அளித்த பதில்.

0
2558
dheena
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று பலர் நடித்திருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் படத்தில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதே போலத்தான் இந்த படத்தில் நடித்த KPY தீனாவும் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போன் கால் பிராங்க் மூலம் பிரபலமடைந்த தீனா, லோகேஷ் கனகராஜ் நடித்த கைதி படத்தின் மூலம் கவனம் பெற்றார்.

இதையும் பாருங்க : மனைவியை பிரிந்த பகல் நிலவு சீரியல் நடிகர் அசீம் – காரணம் ஷிவானியா ?

- Advertisement -

இந்த படத்தில் கார்த்திக்குடன் படம் முழுதும் பயணம் செய்வார் தீனா. ஆனால், மாஸ்டர் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தார் தீனா அதே போல இவரது கதாபாத்திரமும் மனதில் பதியும்படி இல்லை. இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் படத்தில் தீனா நடித்ததை பலரும் கேலி செய்து வருகின்றனர். படத்தை விட நீங்கள் வந்த காட்சியை படத்திற்காக கொடுத்த பேட்டி தான் அதிகம் என்று கேலி செய்து வருகின்றனர்.

கைதி படம் அளவிற்கு இந்த படத்தில் தீனாவின் கதாபாத்திரம் எடுபடவில்லை என்றாலும் நடிகர் தீனா, தொடர்ந்து மாஸ்டர் படத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் இவருக்கும் உண்டான ஒரு முக்கியமான காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைபடத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர் ஒருவர் ‘அநியாயத்துக்கு ஒரு அட்வைஸ்கே சோறு போட்டு வளத்த பவானிய காட்டி கொடுத்துட்டியே தல’ என்று கமன்ட் செய்து இருந்ததற்கு ‘நம்பி இருக்கவங்கள ஏமாத்த கூடாதுல ‘ என்று கேலியாக பதில் கொடுத்துள்ளார் தீனா.

-விளம்பரம்-
Advertisement