அன்னிக்கி நான் வீட்ல இருங்கனு அட்வைஸ் பண்ணதுக்கு கலாய்சீங்க, இப்போ இதுக்கு பதில் சொல்லுங்க – மாஸ்டர் பட நடிகரின் நச் கேள்வி.

0
1471
shanthanu
- Advertisement -

உலகம் முழுவதும் COVID 19 பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரை வாங்கி உள்ளது. உலகையே புரட்டிப் போடும் அளவிற்கு இந்த வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் கொரோனாவினால் கொத்துக் கொத்தாக மக்கள் இறந்து வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்றும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியில் வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

-விளம்பரம்-

ஆனால், அதையும் மீறி மக்கள் வெளியில் சுற்றிக் கொண்டு திரிகிறார்கள். அரசாங்கம் சொல்வதை தெனாவட்டாக எடுத்துக் கொண்டு நடப்பதால் தான் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது என்று கூறப்படுகிறது. இதனால் சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் கொரோனா குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள்.

- Advertisement -

வீடியோவில் பலரும் கெஞ்சியும், அன்பாகவும், பொறுமையாகவும் வெளியில் வராதீர்கள் பாதுகாப்பு இருங்கள் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதை காதில் வாங்கிக் கொள்ள மாட்டோம் என்று ஒரு கும்பல் சுற்றி தெரிகின்றது. அந்த வகையில் நடிகர் சாந்தனு அவர்கள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் நாளன்றே அவர் தன்னுடைய டுவிட்டரில் பாதுகாப்பாக வீட்டில் இருங்கள், வெளியில் சுற்றாதீர்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

இப்படி விழிப்புணர்வு வீடியோக்கள் வந்தாலும் பல பேர் அரசாங்கம் சொல்லியும் வெளியில் கும்பல் கும்பலாக நின்று பேசிக் கொண்டும், சுற்றிக்கொண்டும் தான் இருக்கிறார்கள். இது தான் இந்தியாவில் கொரோனாவின் பரவலுக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது சாந்தனு அவர்கள் மீண்டும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அதில் கூறியிருப்பது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலத்தில் போலீஸ்கள் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதிலும் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை இரும்பு தகரத்தால் சீல் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால், அங்கேயும் கும்பலாக சிலபேர் தாயம் விளையாடிக் கொண்டிருப்பது ட்ரோன் மூலம் வெளியாகி உள்ளது. அதை பார்த்தவுடன் அவர்கள் அனைவரும் தலை தெறித்து ஓடுகிறார்கள்.

இருந்தாலும் அவர்களை பின் தொடர்ந்து அவர்கள் வீட்டில் நுழையும் ட்ரோன் சென்று கொண்டே இருந்தது. தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சாந்தனு பதிவிட்டு தயவுசெய்து வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டு இருந்த என்னை கலாய்த்தீர்களே. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க என்று குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவினால் மக்கள் வீட்டுக்குள் இருப்பதால் போரடிக்காமல் இருப்பதற்காக உடற்பயிற்சி செய்வது, சமையல் செய்வது, புத்தகம் படிப்பது, பெயிண்டிங் என பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள். அதில் அதிகமாக செய்வது விளையாடுவது தாயம் தான். இந்த indoor ஆக இருந்த விளையாட்டை தற்போது outdoor விளையாட்டாக மாற்றி விட்டார்கள்.

தற்போது நடிகர் சாந்தனு அவர்கள் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவனாக நடித்து இருக்கிறார். கொரோனாவின் காரணமாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆவதில் கொஞ்சம் சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது. மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement