எதுக்கு கொசு வலைய போடுன்னு இருக்கீங்க. மாஸ்டர் நாயகி மாளவிகாவை கலாய்த்த நெட்டிசன்கள்.

0
17073
malavika
- Advertisement -

இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, சசிகுமார், குரு சோமசுந்தரம், நவாசுதின் சித்திக், மகேந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் கதாநாயகிகளாக திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் ஆகியோரோடு மாளவிகா மோகனனும், சசி குமாரின் ஜோடியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

- Advertisement -

மலையாள நடிகையான இவர் ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் மஜித் இயக்கிய ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். கன்னடம், மலையாளம், இந்தியை தொடர்ந்து தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம்இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார் மாளவிகா. தற்போது நடித்து வரும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிடுவார். அதிலும் இவர் பதிவிடும் பெரும்பாலான புகைப்படங்கள் கவர்ச்சியாக தான் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் மெல்லிய ஆடை அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் நடிகை மாளவிகா மோகனன்.

-விளம்பரம்-

இதனை கண்ட ரசிகர் ஒருவர்., எதற்கு கொசு வலைக்குல் புகுந்து கொண்டிருகிறீர்கள் என்று கிண்டலாக கமன்ட் செய்துள்ளார். இது ஒருபுறம் இருக்க மாளவிகா மோகனன் மாஸ்டர் விஜயுடன் காதல் டூயட் பாடுவது மட்டுமின்றி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்காக நடிகை மாளவிகா ஒரு சில பயிற்சிகளை மேற்கொண்டு இருப்பதாக தகவல் வந்து உள்ளது. இவர் தன்னுடைய கதாபாத்திரத்துக்காக ’parkour’ என்ற கலையை பயிற்சி எடுத்து வருகிறார். பிரான்ஸ் நாட்டில் தான் முதலில் தோன்றியது. இந்த பயிற்சியின் மூலம் இவர் இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிக்கப் போவதாகவும், விஜய் சேதுபதியுடன் மோதும் ஆக்சன் காட்சிகளில் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement