நண்பர் அஜித் மாதிரி. மாஸ்டர் ஆடியோ லாஞ்சில் ரகசியம் சொன்ன தளபதி.

0
2223
vijayajith

உலகம் முழுவதும் தனெக்கென ஒரு ரசிகர் படையை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் “பிகில்” படம் வெளியானது. விஜயின் பிகில் படம் ரசிகர்களை தெறிக்க விட்டது. இது அனைவருக்கும் தெரிந்ததே. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் தான் முதன் முறையாக இணைந்துநடித்துள்ளனர்.

Image

இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று ஹோட்டல் லீலா அரண்மனையில் கோலாகலமாக நடை பெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் அப்பா, அம்மா இருவருமே கலந்து கொண்டார்கள். அப்போது விஜய்க்கு பிடித்த பாடல்கள் என்றால் ஒன்று மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி, மற்றொன்று காதலுக்கு மரியாதை படத்தில் ஓ பேபி என்று கூறினார்கள்.

இதை தொடர்ந்து இப்படத்தில் எழுத்தராகப் பணிபுரிந்த இயக்குனர் ரத்தாகுமார் அவர்கள் கூறியது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் thug லைப், ரெய்டு வந்தாலும் போனாலும் அவர் தான் கில்லி. எவ்வளவோ பிரச்சனைகளை தாண்டி இந்த படத்தை எடுத்து முடித்து இருக்கிறார் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

இப்படி பலரும் பேசி முடிக்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விஜய்யின் பேச்சி துவங்கியது. பொதுவாக கடந்த சில வருடங்களாக நடைபெற்ற விழாக்களில் விஜய் சாதாரண பேண்ட் ஷர்ட்டில் தான் வருவார். ஆனால், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கோட ஷுட்டில் வந்தது பலருக்கும் கொஞ்சம் ப்ரெஷ்ஷாக தெரிந்தது.

இதுகுறித்து விஜய் பேசுகையில், ஒவ்வொரு வட்டியும் ரொம்ப பேடா ட்ரெஸ் பன்றேன்னு பல்லவி சிங் (விஜய்யின் ஸ்டைலிஸ்ட்) இத கொடுத்தாங்க. நானும் ஓகே, நண்பர் அஜித் மாதிரி ட்ரெஸ் போடலாம்னு வந்தேன். நமக்கு சூட் ஆகாதா என்று கூறியுள்ளார். தல குறித்து தளபதி இப்படி பேசியுள்ளது தல ரசிகர்கள் மத்தியில் குஷியை கிளப்பியுள்ளது.

Advertisement