மொத்தம் 8 பாடல், மாஸ்டர் படத்தில் யுவனும் பாடி இருக்காராம். வெளியான டிராக் லிஸ்ட் இதோ.

0
6381
yuvan
- Advertisement -

உலகம் முழுவதும் தனெக்கென ஒரு ரசிகர் படையை கொண்டவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் “பிகில்” படம் வெளியானது. விஜயின் பிகில் படம் ரசிகர்களை தெறிக்க விட்டது. இது அனைவருக்கும் தெரிந்ததே. பிகில் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடித்து உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை மாநகரம், கைதி படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கி இருக்கார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் தான் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தினை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரித்து இருக்கிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : தீனா, நந்தா பட குழந்தை நட்சத்திரதிற்கு திருமணம். புகைப்படம் இதோ.

இந்த படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் முதன் சிங்களாக வெளியாகி இருந்தது. அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. அந்த பாடலை தொடர்ந்து வாத்தி கமிங் என்ற பாடல் வெளியாகி இருந்தது. மேலும் நேற்று மாலை இந்த படத்தின் மூன்றாவது பாடல் ‘வாத்தி ரெய்டு’ என்று வெளியாகி இருந்தது. இந்த மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

-விளம்பரம்-

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள முழு பாடலின் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ஒரு தீம் மியூசிக் பாடலுடன் சேர்த்து 8 பாடல்களாம். இதில் மிகபெரிய சர்ப்ரைஸ் என்னவென்றால் இந்த படத்தில் விஜய்காக மூன்று இசையமைப்பாளர்கள் பாடியுள்ளார்களாம். யுவன் ஷங்கர் ராஜா, அனிருத், சந்தோஷ் நாராயணன் என்று மூன்று பேர் பாடியுள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்திற்கு இசையமைத்து இருந்தார். தற்போது 17 ஆண்டுகள் கழித்து விஜய் படத்தில் பணியாட்டியுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. பொதுவாக யுவன் இசை வெளியீட்டு விழா என்றால் பாடி விடுவார். ஒருவேளை இன்று நடைபெற உள்ள மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பாடுவாரா என்பதை பாப்போம்.

Advertisement