தீனா, நந்தா பட குழந்தை நட்சத்திரதிற்கு திருமணம். புகைப்படம் இதோ.

0
60262
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை ஷீலா. இவர் தமிழில் பூவே உனக்காக, கோல்மால், மாயா, நந்தா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருந்தார். அதன் பிறகு ஷீலா அவர்கள் இளவட்டம், வீராசாமி, சீனா தானா 001, கண்ணா, வேதா உட்பட பல படங்களில் ஹீரோயினாகவும் நடித்து இருந்தார். இவர் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார். இவர் குழந்தை நட்சத்திரமாக 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

நடிகை ஷீலா தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக அஜித், விஜய் ஆகிய நடிகர்களின் படங்களிலும் கூட நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் கடைசியாக கன்னட மொழியில் ஹெபர் என்ற படத்தில் தான் நடித்திருந்தார். பின் இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் இரண்டு மூன்று வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.

- Advertisement -

பின் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதனால் இவருக்கு திருமண ஏற்பாடுகள் தொடங்கியது. இந்நிலையில் இவர் தற்போது தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு உள்ளார். ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் சந்தோஷிக்கும் ஷீலாவுக்கும் சென்னையில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

மேலும், நடிகை ஷீலா அவர்கள் தன்னுடைய திருமண போட்டோக்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இது குறித்து அவர் கூறியது, எனக்கு இந்த நாள் சிறப்பான நாள். எதனுடனும் ஒப்பிட முடியாத மகிழ்ச்சியை என் இதயம் உணர்கிறது. நான் புதிய நாளில் புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறேன் என்று தன்னுடைய திருமண புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தார் நடிகை ஷீலா.

-விளம்பரம்-

தற்போது நடிகை ஷீலாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நடிகை ஷீலாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இனி நடிகை ஷீலா படத்தில் நடிப்பாரா? என்று தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளார்கள்.

Advertisement