லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.
இந்த படத்தில் சாந்தனு, தீனா, ரம்யா, சூப்பர் சிங்கர் சௌந்தர்யா, Vj தாரா என்று எத்தனையோ பேர் நடித்தாலும் அவர்கள் கதாபாத்திரங்களுக்கு சொல்லிக்கொள்ளும்படி இடம் கிடைக்கவில்லை. அதிலும் சாந்தனு, இந்த படம் வருவதற்கு முன்னர் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து கொடுத்த பில்ட்டப்பை பார்த்து பலரும் ஆவலுடன் இருந்தனர். ஆனால், இவருக்கு கிடைத்தது என்னவோ பேட்ட படத்தில் பாபி சிம்ஹாவிற்கு கொடுக்கப்பட்டது போன்ற கதாபாத்திரம் தான்.
மேலும், இந்த படத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது ஆண்ட்ரியா மற்றும் மகேந்திரனின் கதாபத்திரம் தான், அதற்க்கு காரணமே இவர்கள் இருவரையும் படம் வெளியாகும் வரை ஒரு டீசரில் கூட காண்பிக்கவில்லை. இந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு அடுத்து அதிகம் கவனிக்கப்பட்டது மாஸ்டர் மகேந்திரனின் நடிப்பு தான். இந்த படத்தில் அவர் குட்டி பாவானியாக நடித்து இருந்தார்.
படத்தில் சிரிது நேரமே வந்தாலும் இவரது கதாபாத்திரம் படத்தில் ஒரு அழுத்தமாக இருந்தது. மேலும், இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் சேதுபதியை, மாஸ்டர் மகேந்திரன் சந்தித்து உள்ளார். அப்போது விஜய் சேதுபதி, தனது கையால் அவருக்கு மாலை அணிவித்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் மாஸ்டர் மகேந்திரன்.