குட்டி பவானி வாங்கிய புதிய காரை ஓட்டிய பெரிய பவானி – வைரலாகும் புகைப்படம் இதோ.

0
3447
mahendiran
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் சாந்தனு, தீனா, ரம்யா, சூப்பர் சிங்கர் சௌந்தர்யா, Vj தாரா என்று எத்தனையோ பேர் நடித்தாலும் அவர்கள் கதாபாத்திரங்களுக்கு சொல்லிக்கொள்ளும்படி இடம் கிடைக்கவில்லை. ஆனால், இந்த படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு அடுத்து அதிகம் கவனிக்கப்பட்டது மாஸ்டர் மகேந்திரனின் நடிப்பு தான். இந்த படத்தில் அவர் குட்டி பாவானியாக நடித்து இருந்தார்.படத்தில் சிரிது நேரமே வந்தாலும் இவரது கதாபாத்திரம் படத்தில் ஒரு அழுத்தமாக இருந்தது. மேலும், இந்த படத்தில் இவரது நடிப்பை பார்த்துவிட்டு பலரும் பாராட்டினர்.

இதையும் பாருங்க : கர்ணன் படத்தில் அனைவரையும் கவர்ந்த இந்த பையன் யார் தெரியுமா ? இதோ விவரம்.

- Advertisement -

இந்நிலையில், மாஸ்டர் மகேந்திரன் புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார். இந்த காரின் சாவியை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கையால் வாங்கிஇருந்தார். மேலும் புதிய ஆண்டு, புதிய வாழ்க்கை, புதிய பயணம் எல்லாம் மாஸ்டரில் இருந்து தொடங்கியது என்று சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்து இருந்தார். மகேந்திரனின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் மாஸ்டர் மகேந்திரனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துவந்தனர்.

இப்படி ஒரு நிலையில் தான் வாங்கிய காரை, விஜய் சேதுபதியிடம் எடுத்து சென்று அவரிடம் வாழ்த்து பெற்றுள்ளார். மேலும், அந்த காரை விஜய் சேதுபதியிடம் கொடுத்து ஓட்ட சொல்லியுள்ளார். அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மகேந்திரன், என்னோட பவானி என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement