விஜய் ரசிகரா காமிச்சிக்கிட்ட சிபிராஜ், சாந்தனு எல்லாம் Flop ஆகிட்டாங்க, அந்த லிஸ்ட்ல இப்போ நீங்க- கேலி செய்தவருக்கு மாஸ்டர் மகேந்திரன் கொடுத்த பதிலடி.

0
600
MasterMahendran
- Advertisement -

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக திகழ்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாம் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் விஜய்க்காக எழுதியிருக்கிறார். மேலும், இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

அதோடு உலகம் முழுவதும் தற்போது விஜயின் அரபி குத்து பாடல் தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஒரே வாரத்தில் பாடல் வெளியாகி 70 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து 100 மில்லியன் பார்வையாளர்களை நெருங்க இருக்கிறது. மேலும், பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இது ஒரு பக்கமிருக்க, தளபதி விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள்.

- Advertisement -

விஜய்யின் தீவிர ரசிகர்கள்:

அதிலும் சினிமா பிரபலங்கள் பலரும் இவருடைய மிகப்பெரிய ரசிகர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் சாந்தனு, சிபிராஜ் என்று பலரும் இவருக்கு ரசிகர்களாக உள்ளார்கள். மாஸ்டர் படத்தில் கூட சாந்தனு, மாஸ்டர் மகேந்திரன் நடித்திருந்தார்கள். ஆனால், சாந்தனுவை விட மாஸ்டர் மகேந்திரன் கதாபாத்திரம் தான் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் மாஸ்டர் மகேந்திரனும் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர். இந்நிலையில் சமீப காலமாக சோசியல் மீடியாவில் விஜயின் தீவிர ரசிகர்களாக இருக்கும் பிரபலங்கள் விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்கள்.

மாஸ்டர் மகேந்திரன் பதிவிட்ட பதிவு:

அந்த வகையில் தற்போது மாஸ்டர் மகேந்திரனும் விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் கேலி கிண்டல் செய்யும் விதமான top failure actor என்றெல்லாம் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். இதை பார்த்த மாஸ்டர் மகேந்திரன், நான் யார் என்பது எதிர்காலத்தில் உங்களுக்கு தெரியும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இப்படி இவர் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வளர்ந்து வரும் கதாநாயகனாக திகழ்பவர் மாஸ்டர் மகேந்திரன்.

-விளம்பரம்-

மாஸ்டர் மகேந்திரன் நடித்த படங்கள்:

இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதற்கு பிறகு கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்துள்ளார். பின் இவருக்கு பெரிதும் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சமீப காலமாக இவருடைய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். அதோடு ஏற்கனவே இவர் விஜய் உடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை, மின்சார கண்ணா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பல வருடங்கள் கழித்து மீண்டும் மாஸ்டர் படத்தில் விஜயுடன் இணைந்து மகேந்திரன் நடித்திருக்கிறார்.

மாஸ்டர் மகேந்திரன் சினிமா பயணம்:

இருந்தாலும் இவரால் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை பிடிக்கமுடியவில்லை. இவருக்கு அதிகம் திறமை இருந்தும் சரியான கதை அமையாததால் சினிமாவில் போராடிக் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் மாஸ்டர் படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்து இருக்கிறது. மாஸ்டர் படத்தின் மூலம் இவர் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டு வருகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தற்போது இவர் பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்

Advertisement