லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.
தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் வசூலிலும் சாதனை படைத்தது. 10 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது. இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜனவரி 29 ஆம் தேதி இந்தியா உட்பட 240 நாடுகளில் வெளியாக இருப்பதாக அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இந்த படத்தில் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று பலர் நடித்திருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் படத்தில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் பல மீம்களை போட்டு ட்ரோல் செய்து வந்தனர். இந்த படத்தில் ரசிகர்களுககு பரிட்சமில்லாத பலர் நடித்து இருந்தனர். அதில் கலாட்டா குருவும் ஒருவர். இந்த படத்தில் விஜய் வீட்டில் வேலை செய்யும் நபராக நடித்து இருந்தார்.
ஆனால், இவருக்கும் படத்தில் பெரிதான காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை. கலாட்டா குரு ஆரம்பத்தில் மேடை கலைஞ்சனாக இருந்த இவர் பின்னர் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளர்கவும் பணியாற்றினார். மேலும், மாஸ்டர் படத்திலும் சரி, நிஜத்திலும் சரி இவர் பார்ப்பதற்கு சின்னப் பையன் போல இருந்தாலும் நிஜத்தில் இவருக்கு திருமண,மே ஆகிவிட்டது. இதோ அவரின் புகைப்படம்.