5 விஜய் படத்தை மிஸ் செய்து தற்போது மாஸ்டரில் இணைந்துள்ள நடிகர் ரமேஷ் திலக்.

0
8898
ramesh-tilak

சமீபத்தில் வெளிவந்த ‘ஓ மை கடவுளே’ படத்தில் லவ் கோர்ட்டில் விஜய் சேதுபதியுடன் கடவுளின் சகாவாக தூள் கிளப்பியவர் நடிகர் ரமேஷ் திலக். இவர் முதன் முதலாக ரேடியோ ஜாக்கியாக தன் வாழ்க்கையை தொடங்கினார். இவர் சூது கவ்வும், ஆண்டவன் கட்டளை, நேரம், காக்கா முட்டை, ஆரஞ்சு மிட்டாய், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு எனப் பல வெற்றிப்படங்களில் நடித்து உள்ளார். தற்போது நடிகர் ரமேஷ் திலக் அவர்கள் தமிழ், மலையாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ரமேஷ் திலக் அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் அவர் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

'ஓ மை கடவுளே' படத்தில்

- Advertisement -

அப்போது தொகுப்பாளர் ஒருவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் என்ட்ரி ஆனது பற்றி கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு அவர் கூறியது, தெறி படத்தில் தொடங்கி பிகில் வரை என அடுத்தடுத்து ஐந்து படங்களில் விஜய் சார் கூட நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால்,சூழ்நிலை காரணமாக அதை நான் மிஸ் பண்ணிட்டுட்டேன். இப்போ மாஸ்டர் படத்தில் விஜய் சார் கூட வாய்ப்பு கிடைத்து உள்ளது. மாநகரம் சமயத்திலேயே லோகேஷ் கனகராஜ் எனக்கு நல்ல பழக்கம். பின் கைதி படத்தில் ஒரு ரோலில் நான் நடிக்க வேண்டியது. ஆனால், சில காரணங்களால் கையை விட்டு போய் விட்டது.

இதையும் பாருங்க : ஒழுங்கா நட, இந்த வேல எல்லாம் வெச்சிக்காத. ரசிகரை எச்சரித்த சம்மு. வைரலாகும் வீடியோ.

-விளம்பரம்-

பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் சார் படம் பண்ண போகிறார் என்று தெரிந்தவுடன் அவர்கிட்ட வாய்ப்பு கேட்டேன். இந்தப் படத்தில் மட்டும் கிட்டத்தட்ட 17 அஸிஸ்டென்ட் இயக்குனர்களுக்கு மேல இருக்காங்க. ஆர்ட்டிஸ்ட், டெக்னீஷியன் என்று மொத்த டீம்மே பெருசு. எல்லாரும் தீயா உழைத்து கொண்டு இருக்காங்க. மேலும், படத்தை மாஸா கொண்டு வந்திருக்காங்க. என்னுடைய போர்ஷனுக்கான ஷூட் முடிந்தது. காலேஜ் கேம்பஸ்க்குள்ள பசங்களை விட்டா எப்படி ஜாலியா இருக்குமோ அப்படி தான் ஷூட்டிங் ஸ்பாட் இருந்தது. படத்துலேயும் இப்படித் தான் ஜாலியா இருக்கும் என்று கூறினார்.

மனைவி நவலக்ஷ்மியுடன்
தனது மனைவியுடன் ரமேஷ் திலக்

இதனை தொடர்ந்து மீண்டும் தொகுப்பாளர் ரமேஷ் திலக் இடம் விஜய் உங்களிடம் என்ன சொன்னார் என்று கேட்டார். அதற்கு அவர் கூறியது, நான் ஓ மை கடவுளே படத்துக்கான டப்பிங்க்குப் போன போது அங்கு தான் விஜய் சாரை பார்த்துப் பேசினேன். நான் பேசினேன்னு என்று சொல்வதை விட அவர் பேசினார் நான் கேட்டேன்னு தான் சொல்லணும். முதல் முறை நான் அவரை நேரில் பார்த்த போது பயங்கர பதற்றமாக இருந்தேன். பின் விஜய் சார் உங்களுடைய கும்பளங்கி நைட்ஸ் படம் பார்த்தேன். நைஸ் வொர்க். நல்லா பண்ணிருக்கீங்க என்று சொன்னார். அதுமட்டும் இல்லை ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பின் போது பார்த்த போது என்னுடைய போர்ஷன் ஷூட்டிங் முடியுற வரை தினமும் எனக்கு ஹாய் சொல்லி ஹக் பண்ணாம இருந்தது இல்லை என்று புன்னகையுடன் கூறினார்.

Advertisement