ஒழுங்கா நட, இந்த வேல எல்லாம் வெச்சிக்காத. ரசிகரை எச்சரித்த சம்மு. வைரலாகும் வீடியோ.

0
86502
samantha
- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. சமந்தா அவர்கள் தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீப காலமாகவே நடிகை சமந்தா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

-விளம்பரம்-
Image result for jaanu movie

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஓ பேபி திரைப்படமும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தாலும் சமந்தாவுக்கு தமிழில் தான் இன்னும் வாய்ப்பு வரவில்லை. இந்த நிலையில் தமிழில் வெளியான 96 படத்தை தெலுங்கில் “ஜானு” என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தனும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்து உள்ளனர். தமிழில் 96 படத்தை எடுத்த பிரேம் குமார் தான் ஜானு படத்தையும் இயக்கி உள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையை மையமாக கொண்டது.

- Advertisement -

இதையும் பாருங்க : அதிக கனம் தாங்காது என்று தெரிந்து கொண்டும் அதை எடுத்துட்டு வந்து இருக்கிறார்கள்-வெளியான ஷாக்கிங் தகவல்.

தற்போது இந்த ஜானு திரைப்படம் தெலுங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. . நடிகை சமந்தா அவர்கள் தன்னுடைய ஜானு திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று திருமலையில் பாத யாத்திரை மேற்கொண்டார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. . சமந்தா அவர்கள் ஜானு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்று திருப்பதி கோவிலில் பாத யாத்திரை செய்து உள்ளார். அந்த வீடீயோவை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

சமந்தாவை திருப்பதி மலையில் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருடன் செல்பி புகைப்படங்களை எடுத்துக்கண்டனர்.மேலும், ஒரு சில சமந்தாவை பின் தொடர்ந்து போட்டோ எடுத்தனர். அப்படி ரசிகர் ஒருவர் சமந்தாவை பின் தொடர்ந்து வீடியோ எடுத்தார். இதனால் கடுப்பான சமந்தா ‘நடந்தா ஒழுங்கா நட, இந்த போட்டோ கீட்டோ எடுக்கற வேல எல்லாம் வெச்சிக்காத’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement