6 வருடங்களுக்கு பின் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி. எந்த சேனலில் தெரியுமா ?

0
3356
- Advertisement -

சினிமாவைப்பொறுத்தவரை எத்தனையோ நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். ரஜினி – லதா துவங்கி ஆர்யா சாயிஷா வரை எத்தனையோ நடிகர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான். சினிமாவைப் போல சின்னத்திரையிலும் இப்படி காதலித்து திருமணம் செய்து கொண்ட பல்வேறு நடிகர் நடிகைகள் இருக்கிறார்கள். அந்த ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ப்ரீத்தி ஜோடி. நடிகர் சஞ்சீவ் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை, இவர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

-விளம்பரம்-

நடிகர் சஞ்சீவ் 1989 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனச் செல்வன் என்ற படத்தில் அறிமுகமானார் அதன்பின்னர் சந்திரலேகா நிலாவே வா பத்ரி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்து இருந்தார். தற்போது நீண்ட வருடங்களுக்கு பின்னர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார் சஞ்சீவ். சினிமா மட்டுமல்லாது இவர் சின்னத்திரையிலும் பிரபலம் தான்.

- Advertisement -

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் அறிமுகமான இவர் அதன் பின்னர் பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார். அதிலும் குறிப்பாக 2007 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார் சஞ்சீவ். நடிகர் சஞ்சீவ் சீரியல் நடிகையான ப்ரீத்தி சீனிவாசனை கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

This image has an empty alt attribute; its file name is 1-87.jpg

சஞ்சீவி போல ப்ரீத்தியும் சின்னத்திரையில் மிகவும் பிரபலம் தான் இவர் எண்ணற்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் ப்ரீத்தியை சின்னத்திரை தொடர்களில் அவ்வளவாக காண முடிவதில்லை. இப்படி ஒரு நிலையில் 6 வருடங்களுக்கு பின்னர் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் ப்ரீத்தி. சன் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் ஒன்றில் விரைவில் நடிகை ப்ரீத்தியை காணலாம்.

-விளம்பரம்-
Advertisement