சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கண்டது. இந்த படத்தில் வில்லனாக செல்வராகவன் நடிக்கிறார். தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மார்ச் 31 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21 ஆம் தேதி நெல்சன் பிறந்தநாளில் வெளியாகி இருந்தது.இந்த படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார்.
செல்வராகவனைத் தொடர்ந்து யோகி பாபு, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் ஆகியோரும் ‘பீஸ்ட்‘ படத்தில் நடிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்த ஜனனி துர்கா என்பவரும் நடிக்க இருக்கிறார்.
இதையும் பாருங்க : ஆயிரம் “கர்ணன்” வந்தாலும் இந்த “அசுர பரம்பரை” அரசியலை மாற்றுவது கடினம் தான் – ரசிகரின் பதிவுக்கு மோகன் பதில்
தொடர்ந்து 2-வது முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ஜனனி துர்கா தெரிவித்துள்ளார். பீஸ்ட் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடைபெற்றது. இதை தெடர்ந்து சென்னையில், ஷாப்பிங் மால் அரங்கம் அமைத்து இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர்.
பிறகு சென்னை புறநகரில் மூன்றாம்கட்ட படப்பிடிப்பை தொடங்கி, தொடர்ந்து நடத்தி வந்தனர்.நான்காம்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்குகிறது. செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் டெல்லியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், இந்த படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியிட திட்டமிடபட்டுள்ளது.